Shadow

Tag: நடிகர் மம்முட்டி

Bramayugam விமர்சனம்

Bramayugam விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கேரளத்தில் நாட்டார் கதைகள், தமிழின் தொன்மையைப் போலவே மிகப் பிரபலமானதாகும். 18 ஆம் நூற்றாண்டில், கேரளத்தில் வாழ்ந்த கொட்டாரத்தில் சங்குண்ணி (Kottarathil Sankunni) என்பவர். மக்களிடையே பேசப்பட்ட நாட்டார் கதைகள் அனைத்தையும் ஐதீயமாலா (Aithihyamala) என்ற தொகுப்பாகக் கொண்டுவந்தார். எட்டு பாகங்களில் சுமார் 126 கதைகள், இந்தத் தொகுப்பில் இருக்கிறது. இன்றைக்கும் இந்தத் தொகுப்பு கேரளாவில் மிகப் பிரபலமானவை. இந்தக் கதைகள் அனைத்தும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் சம்பவங்கள், மந்திரவாதிகள் மற்றும் பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்து செல்வங்களைக் காக்கும் அழகு மிக்க பெண்கள், யோகக்கலை, மன்னர்கள் மற்றும் களரிப்பயிற்று வல்லுநர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், யானைப்பாகன்கள் மற்றும் தந்திர நிபுணர்கள் என பலத்தரப்பட்ட மனிதர்கள் பற்றி அமைந்துள்ளன. இந்தக் கதைகளில் ஒன்றாக குஞ்சாமோன் போற்றி எனும் மந்திரவாதி பற்றிய கதையும் ...
விரைவில் தமிழில் ரீலீஸ் ஆகும் மம்முட்டியின் “பிரமயுகம்”

விரைவில் தமிழில் ரீலீஸ் ஆகும் மம்முட்டியின் “பிரமயுகம்”

இது புதிது, சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நடிகர் மம்முட்டியின் 'பிரமயுகம்' திரைப்படம் பிப்ரவரி 15 அன்று மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது...விரைவில் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது! கடந்த ஐந்து தசாப்தங்களாக சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிய வைத்து ஈடு இணையற்ற நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. அவரது வரவிருக்கும் 'பிரமயுகம்' திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவில் மிரட்டலான அவதாரத்தில் பார்வையாளர்களைக் கவர உள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த 'பிரமயுகம்' படத்தை, 'பூதகாலம்' புகழ் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் முன்பு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதன் ஒரிஜினல் வெர்ஷனை முதலில் பார்வையாளர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற ...