Shadow

Tag: நடிகை பார்வதி

“ரஞ்சித்தின் ஆர்மியில் நானொரு சோல்ஜர்” – பார்வதி திருவோத்து

“ரஞ்சித்தின் ஆர்மியில் நானொரு சோல்ஜர்” – பார்வதி திருவோத்து

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகை பார்வதி, '' நான் இன்னும் அந்த கங்கம்மா கதாபாத்திரத்திலிருந்து மீளவில்லை. ஜி. வி. பிரகாஷ் இந்தப் படத்திற்காக வழங்கிய இசை, ஒவ்வொரு காட்சியிலும் எங்களின் நடிப்பை மேம்படுத்துவதாகவே இருந்தது. இதற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பிற்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், மிகப் பெரிய வெற்றிப் படங்களை வழங்கிய நிறுவனம். இவர்களுடன் இந்தப் படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாது. இயக்குநர் பா. ரஞ்சித்துடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்தக் கனவு ...
மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மையத்தை நோக்கி சோம்பலாக நீந்தும் பம்மாத்துக்கள் எதுவும் இல்லாத நேரடியான கதை. ஏற்கெனவே ஏசியாநெட்டிலும் இன்ன பிற தொலைக்காட்சிகளிலும் அலசப்பட்ட கரு. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஈராக்கில் பணிபுரிந்து ஐஎஸ் தீவிரவாதிகளின் பிணைக்கதிகளாகச் சிக்கி மீட்கப்பட்டவர்களின் கதைதான் இது என்று தெளிவாகக் கதையின் க்ளைமாக்ஸையே சொல்லி விட்டுத் தொடங்கும் படம். வெறும் செய்தியாக மட்டுமே இந்த நிகழ்வுகளைப் பார்த்தவர்களுக்கு அந்தச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் உறைந்து போன நிமிடங்களை, அதிலிருந்த பயத்தை, அந்த நாட்களின் வேதனையை, விட்டு வருவதா அங்கேயே இறப்பதா என்ற ஊசலாட்ட மனநிலையின் வலியை ஆழமாகக் கடத்துவதில்தான் ஒரு தேர்ந்த இயக்குநர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்து முதன்முறையாக இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் மகேஷ் நாராயணன், தன் முதல் படத்திலேயே தன்னைத் தேர்ந்த இயக்...