நண்பேன்டா விமர்சனம்
ஓகே.. ஓகே.. அளித்த நம்பிக்கையில், சந்தானத்தை இணைத்துக் கொண்டு 'நண்பேன்டா" வரை வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
ஒரே நாளில் தனக்குப் பிடித்த பெண்ணை மூன்று முறை பார்த்து விட்டால், சத்யாவின் வாழ்க்கை ஓஹோவென்று ஏற்றம் காணுமென அவனது ஜாதகத்தில் இருப்பதாக சத்யாவின் அம்மா சொல்கிறார். பின் என்ன? அதேதான்.!
இயக்குநர் ராஜேஷ் போட்டுக் கொடுத்த கோடில் இருந்து வழுவாதவராய் சத்யா எனும் பாத்திரத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ளார். முந்தைய படத்தை விட, நயன்தாரா உடனான காட்சிகளில் தயக்கம் துறந்து நெருக்கமாக நடித்துள்ளார் உதயநிதி. ஆனாலும் சந்தானம் போதும், புதிதாக கதையில் எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாமென்ற அவரது நம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்கிறது.
சிவக்கொழுந்துவாக மிக வித்தியாசமான பாத்திரத்தில் சந்தானம். இந்தப் படத்தில் உதயநிதியின் காதலுக்கு இவர் யோசனையும் சொல்லவில்லை; உதவியும் செய்யவில்லை. ‘சூப்பர் ஃபிகர்’ ரம்யா...