மற்றபடி மனிதர்கள் – வெ.த. புகழேந்தி
அன்ன சத்திரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்பதுதான் இந்த நாவலின் அடிநாதம். எத்தனை பேர் இந்த நாவலை படித்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இந்தப் புத்தகம் கிடைத்ததே என் கிராமத்து ஊரிலுள்ள அந்தக் குட்டி நூலகத்தின் மூலமாய்த்தான். அங்கே ஒரு நாள் க்ரைம் கதைகளைத் தேடித் தேடிக் களைத்துப் போய், விதியே என்று நொந்த படியே கையில் கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதுதான் இந்த "மற்றபடி மனிதர்கள்".
"வெ.த.புகழேந்தி" என்பவரால் எழுதப் பட்ட ஒரு சமூக நாவல் இது. எனக்குத் தெரிந்து நான் படித்த முதல் சமூக நாவலும் இதுதான். என்ன காரணத்தினாலோ அந்தக் கதை என்னை வெகுவாக ஆட்கொண்டு விட்டது.
1981 இல் மீனாட்சி புரம் எனும் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக இஸ்லாமிற்கு மாறியதைப் பிண்ணணியாகக் ...