Shadow

Tag: நந்தினி

DeAr விமர்சனம்

DeAr விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குட் நைட் திரைப்படத்தில் குறட்டை விடும் பிரச்சனையால் நாயகன் பாதிக்கப்படுவான். DeAr இல் அதே குறட்டை விடும் பிரச்சனையால் நாயகி பாதிக்கப்படுகிறாள். பெற்றோரின் அறிவுறத்தலின்படி அந்தப் பிரச்சனை இருப்பதை மறைத்துத் திருமணம் செய்கிறாள். முதலிரவு அன்றே அவளின் முதன்மையான பிரச்சனை தெரியவர, அதைத் தொடர்ந்து எழும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் தான் இந்த DeAr திரைப்படம். கதையின் பிரச்சனை என்ன என்பது தெரியும் போதே, அதன் முடிவும் இதுவாகத் தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும் அந்த முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட தூரத்தை சுவாரசியமான காட்சிகளாலும், கை தேர்ந்த நடிகர்களின் நடிப்பினாலும் இட்டு நிரப்பி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். திரைப்படத்தின் ஆகச் சிறந்த பலமே அதில் நடித்திருக்கும் கை தேர்ந்த நடிகர் நடிகைகள் பட்டாளம் தான். நாயகி ஐஸ்வர்யா ராஜேஷில் துவங்கி, காளி வெங்கட், இ...