‘இனிமேல்’ பாடல் | காதலின் மாயையிலிருந்து தீர்வை நோக்கி
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இசையமைப்பாளரும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், “முதலில் நான் ‘இனிமேல்’ என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆகச் செயல்படுகிறது, அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் மேலெழுந்தது. பின்னர் என் அப்பா இ...