Shadow

Tag: நல்லி குப்புசாமி

இறைவி – 5 ஆம் ஆண்டு விழா

இறைவி – 5 ஆம் ஆண்டு விழா

இது புதிது, சமூகம்
சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினரான தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு இறைவி நிறுவனத்தின் தூண்களில் ஒருவரான ...