Shadow

Tag: நவாசுதீன் சித்திக்

‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

‘சைந்தவ்’  திரைப்படத்தின்  கதாபாத்திர  அறிமுக  காணொளி  வெளியீடு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் 75வது படமாக உருவாகி வரும்  திரைப்படம் “சைந்தவ்”. இப்படத்தை Hit  Series திரைப்படங்களை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்குகிறார்.  வெங்கட் போயனப் பள்ளி மற்றும் நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் உச்ச கட்ட காட்சியை எட்டு முக்கியமான நடிகர்கள் பங்கேற்க படப்பிடிப்பு நடத்தி முடித்திருப்பதாக தகவல்கள் சமீபத்தில் வெளியானது.அதைத் தொடர்ந்து இன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு “சைந்தவ்” படக்குழுவினர் ஒரு காணொலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா,  ருஹானி சர்மா, சாரா, ஜெயப்பிரகாஷ் ஆகிய எட்டு பேரும் ஒரு பாலத்தில் இரவு நேரத்தில் நடந்து வருவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.  திரைப்படத்தில் இந்த எட்டு பேரைச் சுற்றித் தான் கதை ...
 “சைந்தவ்” – உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சி

 “சைந்தவ்” – உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சி

சினிமா, திரைச் செய்தி
Hit 1, 2,3 திரைப்பட வரிசை மூலம் புகழ் பெற்ற இயக்குநரான சைலேஷ் கொளனு இயக்கத்தில், ஷியாம் சிங்க ராய் படத்தைத் தயாரித்த  வெங்கட் போயனப்பள்ளியின் தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்  வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி சர்மா, சாரா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் “சைந்தவ்”.முதன்முதலாக வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படம், நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் 75வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. “சைந்தவ்” திரைப்படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் மிகப் பெரும் பொருட்செலவில் எந்தவொரு சமரசமும் இன்றி உருவாக்கி வருகிறது.சமீபத்தில் “சைந்தவ்” படத்தின் உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சியை 8 முக்கிய நடிகர்களை உள்ளடக்கி கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் 16 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, முடித்து வெற்றிகரமாக திரு...
பேட்ட விமர்சனம்

பேட்ட விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ட்ரெய்லரில் பார்த்த அதே இளமையான துள்ளலான ஸ்டைலான ரஜினியைத் திரையில் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். எதற்கும் காத்திருக்காமல் படம் நேரடியாக ஒரு மாஸ் ஃபைட் சீனில் இருந்து தொடங்குகிறது. ரஜினிஃபை பண்ணப்பட்ட படத்தில் ரஜினி எது செய்தாலும் அழகாக உள்ளது. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் படத்தின் முதற்பாதி ஒரு வண்ணக்கவிதையாய்க் கண்ணைக் கவர்கிறது. திணிக்கப்படாமல், அதே சமயம் வசனங்களில் அரசியலையும் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஹாஸ்டலில் ரேகிங் நடக்கும்பொழுது, அதை நிறுத்தும் ரஜினி, 'புதுசா வர்றவங்களை வர விடாமல் இப்படித்தான் ஓரம் கட்டி வைப்பீங்களா?' என சீனியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்பது போல் வரும் வசனம் ஓர் உதாரணம். அனைவரும் பார்க்க விரும்பிய ரஜினியைத் திரையில் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜ், கதையில் அதிகம் மெனக்கெடவில்லை. ஒரு பழி வாங்கும் கதையை எந்தப் பெரிய திருப்பமும் இல்ல...
இது ரசிகர்களின் பேட்ட

இது ரசிகர்களின் பேட்ட

சினிமா, திரை விமர்சனம்
தீபாவளி பொங்கலுக்கான காத்திருப்புகள் மறைந்து போயிருந்த போதிலும், பட்டாசுகளும் பொங்கப்பொடியும் நினைவுகளின் தூசிக்கு அடியில் உறங்கிப் போயிருந்தாலும் எப்போதுமே குறையாமல் இருப்பது ரஜினி பட ரிலீஸ் மட்டுமே. லிங்கா, கோச்சடையான் மழுங்கி, கபாலி நல்லா இருக்கா இல்லையா என்று மழுப்பி காலா நல்லா இல்லன்னு சொன்னா இந்துத்துவா ஆகிருமோன்னு குழம்பி, 2.0 தலைவா 'உன்னால டயலாக்க ஒழுங்கா பேச முடியல தலைவா, இனி நடிப்பு வேணாம்' எனப் பரிதாபம் கொள்ளச்செய்த நிலையிலும், "பேட்ட பேட்ட" என்ற பரபரப்பு உச்சத்திற்குச் சென்றிருந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் ரஜினி. எப்போதுமே ஜெயிக்கிற குதிரை அது. அந்தக் குதிரையை சரியான களத்தில் விட்டால் எப்படியிருக்கும் என்பதை செய்து காட்டி இருக்கிறது பேட்ட. படம் ஆரம்பித்ததில் இருந்தே ரஜினியிசம் தான். 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!' என்ற முதல் வசனத்தில் இருந்து, 'இந்த ஆட்டம் போதுமா கொழந்த?' என...