
வாயை மூடி பேசவும் விமர்சனம்
இயக்குநர் பாலாஜி மோகன் அசத்தியுள்ளார்.
பனிமலை என்னும் ஊரில் மனிதர்களை ஊமையாக்கிவிடும் விநோதமான வைரஸ் பரவுகிறது. பேசுவதால் அவ்வைரஸ் பரவுகிறது என்பதால், அவ்வூரில் பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்துவிடுகிறது அரசு. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். பேசியே ஆளைக் கவிழ்க்கும் சேல்ஸ் மேன் பாத்திரத்தில் மிக அழகாகப் பொருந்துகிறார். பேசிப் புரிய வைக்க முடியாத விஷயமே உலகில் இல்லை என நம்பும் குணாதிசயம் கொண்டவன் அரவிந்திற்கு நேரெதிர் பாத்திரத்தில் நஸ்ரியா நசிம். பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்ததற்கு மகிழும் அஞ்சனாவாகக் கலக்கியுள்ளார். தானே வகுத்துக் கொண்ட மனத்தடைகளில் சிக்கி உழல்பவரை, அரவிந்த் தான் மீட்கிறான். வழக்கம்போல் காதல்தான் என்றாலும், சலிப்பு ஏற்படுத்தாமலும் உறுத்தாமலும் காட்சிப்படுத்தியுள்...