Shadow

Tag: நான் சிகப்பு மனிதன்

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை. 29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, தன் குறைபாடுகளை மீறி சிகப்பு மனிதனாக மாறி, தன் சொந்த வெறுப்பினை மட்டும் தீர்த்துக் கொள்கிறார். அதோடு அவரது பத்தாவது ஆசையும் பூர்த்தியாகிறது. இந்திரனாக விஷால். மிக மிகத் தெளிவாக இருக்கார். மிகை ஹீரோயிசம், காமெடிக் காட்சிகளில் விஜய்யை இமிடேட் செய்வது போன்றவற்றைலாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு, கதைக்குத் தக...
“விஷால் கருப்பு மனிதன்தான!?”

“விஷால் கருப்பு மனிதன்தான!?”

சினிமா, திரைச் செய்தி
“விஷால் நடிக்கணும்னு ரொம்ப விருப்பப்பட்டது என் மனைவிதான். ‘அவன் இவன்’ பார்த்த பிறகு.. நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். நீ ரொம்ப நல்ல நடிக்கிறன்னு அவன்கிட்ட சொன்னேன். ஸ்டெப் பை ஸ்டெபாக அவன் கோலை (goal) அச்சீவ் பண்றான். அனைவரிடமும் நட்பாகப் பழகுகிறான். இவன் எல்லோரையும் லைக் பண்றான். இவனை மத்தவங்களுக்குப் பிடிக்குது. ரொம்ப சந்தோஷமான அப்பாவாக உணர்கிறேன். ‘நான் சிகப்பு மனிதன்’ என படம் பண்றேன்னு சொன்னான். “நீ எப்படி சிகப்பு மனிதன்? நீ கருப்பு மனிதன்தான?” எனக் கேட்டேன். “இல்ல டாடி.. சிகப்பு மனிதன் என்பது கேரக்டருன்னு சொன்னான். சினிமா தான் நெ.1 எண்டர்டெயினிங் இண்டஸ்ட்ரி உலகத்தில். அந்த இண்டஸ்ட்ரியோட நானும் என் மகனும் நண்பர்களும் அசோசியேட் ஆகியிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்றார் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி. “கிரிக்கெட்டாகட்டும் சினிமாவாகட்டும் விஷாலிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது அவருடைய “தில்”லு....
“என்னைப் பழிவாங்குகிறார் விஷால்” – இயக்குநர் பாலா

“என்னைப் பழிவாங்குகிறார் விஷால்” – இயக்குநர் பாலா

சினிமா, திரைச் செய்தி
‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார் விஷால். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் அதீத துக்கமோ, மகிழ்ச்சியோ, பயமோ ஏற்பட்டால் தூங்கி விழுந்து விடுவார் விஷால். “எனக்கு இந்த நோயோடு சீரியஸ்னஸ் தெரியும். ஏன்னா என்னுடைய அசிஸ்டென்ட்க்கு இந்தப் பிரச்சனை இருந்தது. போய் பேப்பர் எடுத்துட்டு வரச் சொல்லி அனுப்பினா.. அங்க போய் தூங்கிடுவான். டிஸ்கஷன்ல இருக்கும் பொழுது தூங்கிடுவான். இதனால அவன் ஒரு ஆக்ஸ்டென்ட்ல மாட்டி, 2 மாசம் கோமாவில் இருந்தான்” என்றார் இயக்குநர் விஜய். “இந்தப் படத்தில் வொர்க் பண்ற எடிட்டர் ரூபனும், ஜீ.வி.பிரகாஷூம் என் ஃப்ரெண்ட்ஸ். அவங்க மூலமா படத்தோட கதையைக் கேள்விப்பட்டேன். வழக்கமா புதுசா ஒரு கதைன்னு சொல்வாங்க. ஆனா உண்மையிலேயே இயக்குநர் திரு புதுசா ஒரு கதை பிடிச்சிருக்கார். ஹீரோ எக்ஸைட் ஆனா தூங்கிடுவாரு. நான் ட்ரைலர் பார்...
“லக்ஷ்மி மேனனைப் பாதுகாக்கும் விஷால்” – விஷ்ணு குற்றச்சாட்டு

“லக்ஷ்மி மேனனைப் பாதுகாக்கும் விஷால்” – விஷ்ணு குற்றச்சாட்டு

சினிமா, திரைச் செய்தி
“’பாண்டிய நாடு’ படத்தில் விக்ராந்துக்கும் விஷாலுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாயிருந்தது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் லட்சுமி மேனனை மட்டும் மீண்டும் நடிக்க வச்சிருக்கார். விக்ராந்தை ஏன் கூப்பிடலைன்னு தெரியலை. அவர் ரொம்ப வருத்தப்பட்டார். சரி கவலைப்படாத.. அனைவருக்கும் முன் கேட்டுடலாம் சொல்லி இப்போ நான் கேட்டுட்டேன். விஷால் இதற்கு பதில் சொல்வார்னு எதிர்பார்க்கிறேன். ‘பாண்டிய நாடு’ ஷூட்டிங்கின் பொழுது, எனக்கும் ஷூட் போயிட்டிருந்தது. என்னால செட்டுக்குப் போய் லட்சுமி மேனனைப் பார்க்க முடியலை. இந்தப் படத்திலாவது எப்படியாவது பார்த்து ‘ஹை’ சொல்லணும்னு நினைச்சேன். ஆனா ‘சாரி.. இன்னிக்கு லட்சுமி மேணுடன் நெருக்கமான சில காட்சிகள் இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாத’ என எஸ்.எம்.எஸ். அனுப்பினார் விஷால். என்னடா இதுன்னு நினைச்சுக்கிட்டு.. ‘சரி இன்னிக்கு வர்றேன்’ என இன்னொரு நாள் சொன்னேன். ‘சாரி.. லட்சுமி மேனனுடன் தண்ணிக்க...