அவள் பெயர் அபிராமி – 2
முடிவு செய்து வைத்தபடியே கதிரேசு வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் ஆரம்பித்து வைத்தாள் ராமாயி.
"எலே கதிரேசு! அகிலாண்டேஸ்வரிக்கு வயசாயிகிட்டே போகுது! சீக்கிரமா ஒரு கண்ணாலத்தைப் பண்ணிப் பாக்கோணும்னு இல்லாம இப்படிக் கிணத்துல போட்ட கல்லு கணக்கா இருந்தா எப்படி?"
தாழியில் இருந்த தண்ணீரை இரு கைகளால் அள்ளி முகம் கழுவிக் கொண்டிருந்த கதிரேசு நிமிர்ந்து ராமாயியை ஒரு கணம் கூர்ந்து நோக்கினான்.
"ஆத்தா! இப்ப அவளுக்கு என்ன வயசாயிட்டு! இப்பதானே பன்னெண்டாப்புப் போறா! கண்ணால பேச்செடுத்தா கலெக்ட்டர் வரைக்கும் வந்து நிப்பானுக! கம்பிதான் எண்ணனும்!"
"போடா! போக்கத்த பயலுவ! அவனுகளுக்கென்ன தெரியும் பொம்பள புள்ளய பெத்து வெச்சிருக்குறவனோட கஷ்டம்! நம்ம பொண்ணுக்கு எதையெதை எப்ப பண்ணனும்னு நமக்குத் தெரியாதா?"
"அப்பாத்தா! சித்தப்பூவை உள்ள தள்ளாம விட மாட்டே போல" கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டான் சுப்ரமணி.
வெளித் தி...