Shadow

Tag: நாயகன் ராம்குமார்

அர்த்தநாரி விமர்சனம்

அர்த்தநாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இன்ஜினியரான கார்த்திக்கும், காவல்துறை உயரதிகாரியுமான சத்யப்பிரியாவும் காதலிக்கிறார்கள். சத்யப்பிரியா எடுத்து நடத்தும் ஒரு வழக்கும், தன்னை வளர்த்த செல்வமாணிக்கம் ஐயாவின் மரணத்திற்குக் காரணமானவரைத் தேடும் கார்த்தியின் தேடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. தனித்தனியாக இருவரும் இயங்கினாலும், காதலர்கள் அர்த்தநாரி போல் இணைந்து வேட்டையாடுவதாகப் பதற்றம் கொள்கிறார் வில்லன். இந்தக் கண்ணாமூச்சி வேட்டை எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. கல்வியின் அவசியமும், குழந்தைத் தொழிலாளிகளின் அவலமும் படம் நெடுகே சொல்லப்படுகிறது. சொல்பவராக செல்வமாணிக்கம் எனும் பாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார். அவர் பலமுறை ஏற்று சலித்து விட்ட ஒரு பாத்திரம் என்பதால் படத்தில் அவர் அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதனாலென்ன, ரசிகர்களை எப்படியும் ஈர்த்து விடுவதென்ன ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை இறக்கியுள்ளன...
அர்த்தநாரி – நாயகன் ராம்குமார்

அர்த்தநாரி – நாயகன் ராம்குமார்

சினிமா, திரைத் துளி
தல அஜித்தின் தீவர ரசிகரான ராம்குமார், "நான் தல அஜித்தின் உண்மையான விசுவாசி; வெறி பிடித்த ரசிகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எந்தவித பின்பலமுமின்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அவரைத்தான் என்னுடைய முன்மாதிரியாக பார்க்கிறேன்!" என்று நெஞ்சம் மகிழ்கிறார். ராம்குமார் தனது 'அர்த்தநாரி' திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார். சராசரி சென்னை இளைஞர்களைப் போல இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் ராம்குமார். எனினும், நடிப்பின் மேல் இவர் கொண்ட காதல், இவரை சில விளம்பரப் படங்களில் நடிக்க வைத்தது. "நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அந்த வேலையில் நான் முழு மனத்திருப்தி அடையவில்லை. எனக்குள் இருந்த அந்த ஒரே தேடல் நடிப்பை நோக்கிப் பயணித்ததுதான். அப்போது தான் சில விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். அப்படி நான் நடித்து, திரையரங்கங்களில் திரைய...
ஆண் பாதி பெண் பாதி

ஆண் பாதி பெண் பாதி

சினிமா, திரைத் துளி
கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ.எஸ்.முத்தமிழ் என்பவர் கதை எழுதித் தயாரிக்கும் படம் அர்த்தநாரி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரி வேந்தர் பாடல்களை வெளியிட, மைக்ரோசாஃப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவை தம்பி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள் . படத்தின் டிரைலர் ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது . நாயகன் ராம்குமார் பேசும்போது, “நடிகனாவேன் என நினைக்கலை. மாடலிங்கில் இருந்தப்ப நான் பண்ண விளம்பரம் ஒன்னு சத்யம் தியேட்டர்ல வந்துச்சு. அதைப் பார்த்துட்டுத்தான் தயாரிப்பாளர் முத்தமிழ் என்னிடம் கேட்டார். ஐ.டி.யில் வேலை செய்துட்டிருந்தேன். வேலையை விட்டுட்டு என்ன பண்ணலாம்.. ஃபோட்டோகிராஃபி அது இதுன்னு குழப்பிட்டு இருந்தேன். அப்பத்தான், ‘உங்க மேல் கான்ஃபிடண்ட் இருக்கு’ன்னு சொல்லி நடி...