நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க விமர்சனம்
நான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற தயக்கத்தாலேயே சிலர் எக்காரியத்தையும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால், இயக்குநர் L.மாதவனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இல்லை என்பது மட்டும் திண்ணம். மிகத் தைரியமாகஒரு 'குறி'ப்பிட்ட அவஸ்தையைப் படமாக்கியுள்ளார். .
அழுக்கனுக்கு அஞ்சு பணம் செலவு என்பார்கள். அப்படித்தான் செலவினத்தைக் குறைக்க நினைக்கும் சரவணனும், அதனாலேயே ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து மீண்டு அவன் விரும்பிய பெண்ணை மணந்து கொள்கிறானா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
படத்தின் திரைக்கதை, நம்மை 25 ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்று விடுகிறது என்றால் அது மிகையில்லை. உலகத்தின் வேகத்தோடு ஓடாமல், அதை எதிர்த்து பழைமை வழுவக் கூடாதென எதிர் நீச்சல் போட மிகச் சிலராலேயே இயலும். எழுதித் தயாரித்து இயக்கியுள்ள L.மாதவன் அத்தகையவரே!
பழைய பாணி படமென்பதால், நாயகன் இந்திரஜித்துக்கும் நாயக...