திருடர்கள் ஜாக்கிரதை – பொற்பந்தல் காவல் நிலையம்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து JSKஃபிலிம் கார்பரேஷன் மற்றும் லியோ விஷன்ஸ் கூட்டாக தயாரிக்கும் திரைப்படம் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும். இப்படம் வரும் 24ஆம் தேதி வெளி வருகிறது. இது ஒரு முழுநீள காமெடி திரைப்படமாகும். மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி வணிக ரீதியிலும் பெரும் வெற்றி பெறும் என நம்பிக்கையில் உள்ளது தயாரிப்புத் தரப்பு.
அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் ஆகியோர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்....