Shadow

Tag: நிகிலா விமல்

காஷ்மீரில் “ரங்கா”

காஷ்மீரில் “ரங்கா”

சினிமா, திரைத் துளி
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கும் "ரங்கா" படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் என்ற இடங்களில் நடந்தது. சிபிராஜ் - நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. "இயக்குநர் வினோத் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று என்னைக் கேட்ட போது அங்கு அதற்கான சூழ்நிலை அரசியல் ரீதியாகவும் இல்லை, பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை எனப் பலர் எங்களை அச்சமுறுத்தினர். ஆயினும் படத்தின் தரத்துக்காகவும், காட்சிகளின் உயிரோட்டதுக்காகவும் அந்த ரிஸ்க் எடுப்பதில் தவறு இல்லை எனத் தோன்றவே, உடனடியாக காஷ்மீர் சென்று விட்டோம்.ஒ ரு தயாரிப்பாளராக படத்தின் தரத்தை உயர்த்த,, இதைச் செய்வது தான் நல்லது என எனக்குத் தோன்றியது. முக்கியமான காட்சிகளைக் காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் ...
கிடாரி விமர்சனம்

கிடாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாத்தூரின் சண்டியராய்த் தாட்டியம் செய்து ஊரையே மிரளச் செய்யும் கொம்பையா பாண்டியனின் கழுத்தில் எவனோ ஒருவன் கத்தியைப் பாய்ச்சி விடுகிறான். கொம்பையா பாண்டியன் வளர்த்து வைத்திருக்கும் பகைகளில் எது அச்சம்பவத்திற்குக் காரணமாய் அமைகிறது என்பதே படத்தின் கதை. மதயானைக் கூட்டம் படத்தில் மிரட்டியிருந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை, மீண்டும் அதே போலொரு பாத்திரத்தில் கச்சிதமாக உபயோகித்துள்ளார் இயக்குநர் பிரசாத் முருகேசன். வழக்கம் போல் கம்பீரமாக வலம் வருவதுதான், கொம்பையா பாண்டியன் பாத்திரத்தில் எழுத்தாளருக்கு வாய்த்தது எனச் சலிப்பில் இருக்கும் பொழுது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் எடுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் உண்மையான சொரூபம் தெரிய வரும் போதுதான் படம் தன் உச்சத்தை அடைகிறது. கொம்பையா பாண்டியின் மகன் உடைய நம்பியாக நடித்திருக்கும் கவிஞர் வசுமித்ரவும் தன் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவர் முகத்தில...
வெற்றிவேல் விமர்சனம்

வெற்றிவேல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுந்தர பாண்டியன், பிரம்மன் என நண்பர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதர், வெற்றிவேலாக மாறி, தன் தம்பியின் காதலுக்காக எந்த எல்லைக்குப் போகிறார் என்பதே படத்தின் கதை. நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் இளவரசுவும், நாட்டுச்சாலை பிரசிடெண்ட்டாக நடித்திருக்கும் பிரபுவும் தான் கதையின் நாயகர்கள். ஆனால், படத்திற்கு உயிரூட்டியுள்ளதோ விஜி சந்திரசேகர் மட்டும்தான். ‘நாங்க இருக்கும் வரை காதல் சாகாது’ என நாடோடிகள் குழு விஜய் வசந்த், பரணி ஆகியோருடன் சமுத்திரக்கனியும் இறங்கி அதகளப்படுத்துகிறார். படத்தின் பலம் அதன் துணை நடிகர்கள் என்றே சொல்லவேண்டும். சசிகுமாரின் தம்பியாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். நாயகனின் அறிமுகத்தை விட இவரது அறிமுகம் நன்றாக இருப்பதோடு, கதையோடும் பொருந்தியும் வருகிறது. சசிகுமாரின் நடனம் ப்பாஆஆ..! மலையாளி ஜனனியாக மியா ஜார்ஜ். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, நிகிலா விமலுக்கு வழிவிட்டு ...