யு டர்ன் விமர்சனம்
கன்னடத்தில், 2016 ஆம் ஆண்டு பவண் குமார் எழுதி இயக்கிய 'யு டர்ன்' எனும் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 2017இல், மலையாளத்தில் 'கேர்ஃபுல்' என்ற பெயரில், இயக்குநர் V.K.பிரகாஷால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பவண் குமாரே தமிழிலும், தெலுங்கிலும் இப்படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார்.
வேளச்சேரி மேம்பாலத்தில், சாலையின் நடுவே உள்ள கற்களை நகர்த்திவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக யு எடுக்கும் வாகன ஓட்டிகளைப் பேட்டி எடுக்க முயல்கிறார் பயிற்சி நிருபரான ரட்சனா. ஆனால், அப்படி யு டர்ன் எடுத்த அன்றே அவ்வனைவருமே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகின்றனர். அது தற்கொலையா, கொலையா என்று, நாயக் எனும் காவல்துறை அதிகாரியின் உதவியோடு துப்புத் துலக்குகிறார் ரட்சனா. வேளச்சேரி மேம்பாலத்தில், யு டர்ன் எடுத்தவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதே படத்தின் கதை.
பார்வையாளர்களுக்கு, முழு நீள த்ரில...