Shadow

Tag: நிதின் சத்யா

சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு

சட்னி சாம்பார் | இயக்குநர் ராதாமோகனின் 20 ஆம் ஆண்டு

OTT, Web Series
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான நகைச்சுவை சரவெடி வகைமையில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது. வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது. அஜீஸ் அசோக் இசையமைத்துள்ள மூன்றாவது வெப்சீரிஸ் இது. அவரது இசையில், ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இரண்டாவது வெப் சீரிஸ் இது. நடிகர் இளங்கோ குமரவேல், "இயக்குநர் ராதா மோகன் திரைக்கு வந்து 20 வருடங்கள் கடந்திருக்கிறது. அவரது முதல் படத்திலும் நான் இருந்தேன். அவரது முதல் சீரிஸிலும் இருக்கிறேன். மகிழ்ச்சி. ஆர்ட் டைரக்டர் கதிர், ரைட்டர் பொன் பார்த்திபன் என நண்பர்கள் அனைவரும் அவரோடு இத்தனை வருடம் இணைந்து பயணித்து வருகிறோம். அன்று எப்படி எனர்ஜியோடு ...
ஜருகண்டி விமர்சனம்

ஜருகண்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜருகண்டி என்றால் நகருங்க எனப் பொருள்படும். 'இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அதற்காக ஓடிக் கொண்டே இருப்பார்கள்' எனத் தலைப்புக்கு விளக்கமளித்துள்ளார் இயக்குநர் பிச்சுமணி. இவர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கியில் பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்துக் கடன் வாங்குகிறார் ஜெய். அதனால் எழும் பிரச்சனையைச் சமாளிக்க்க, ரெபா மோனிகா ஜானைக் கடத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பிரச்சனையைத் தீர்க்கப் பார்க்கிறார். கடத்தப்பட்ட பெண் பணத்துடன் மிஸ் ஆக, ஜெய்யின் பிரச்சனைகள் இரட்டிப்பாகிறது. பிரச்சனைகளை இருந்து நகராமல், ஓடி ஒளியாமல் எப்படி அதைத் தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை. பெரிய பிரச்சனையில் சிக்கினாலும், அதை ...
மயில்சாமி பேயின் கலாட்டா.!

மயில்சாமி பேயின் கலாட்டா.!

சினிமா, திரைத் துளி
‘விகோசியா மீடியா நிறுவன’த்தின் மூலம் மணிகண்டன், நாகேஸ்வரன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் பாண்டியோட கலாட்டா தாங்கல. ‘நிதின் சத்யா’ நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரக்க்ஷா ராஜ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், சிங்கம் புலி, யோகிபாபு, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சுரேஷ், இசை – சுகுமார், இயக்கம் – T.குணசேகரன். படம் பற்றிப் பேசிய இயக்குநர் டி.குணசேகரன், “புறா கூண்டு’ போல் தோற்றமளிக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்குத் தங்கியுள்ளனர். சோத்துக்கே பஞ்சப்பாடு பாடும் அவர்களால் வாடகை பணத்தைச் சரியாகக் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் பல முறை, பல வழிகளில் இவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முயலும் குடியிருப்பின் உரிமையாளருக்குத் தோல்விதான் கிடைக்கிறது. ‘இனி என் வழி இவர்களுக்கு சரிப்படாது; நமது காவலாள...