கலகத்தலைவன் விமர்சனம்
வஜ்ரா எனும் பன்னாட்டுப் பெருநிறுவனத்தின் ரகசியங்கள் கசிந்தவண்ணம் உள்ளன. தகவல் கசிவின் பின்னணியில் யார் உள்ளார்கள் என துப்பறிய, அர்ஜுன் எனும் வேட்டையாளைக் களம் இறக்குகிறது வஜ்ரா நிறுவனம். அர்ஜுன் ஒவ்வொரு நூலாகப் பிடித்து திருமாறனிடம் வந்து சேருகிறான். யார் இந்த திருமாறன், ஏன் வஜ்ராவை அழிக்க அவன் போராடுகிறான் என்பதே படத்தின் சுவாரசியமான கதை.
வழமை போல் மகிழ் திருமேனியின் மாயம் செய்யும் திரைக்கதை ரசிக்க வைக்கிறது. எட்டு வருடத் திட்டமிடலுக்கான நோக்கம், ஒரு பழி வாங்கும் கதையெனக் கடைசியில் சுருக்கியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஏனெனில், படம், அரசு நிறுவனங்கள் தனியார்மயமாவதன் ஆபத்துகள் குறித்தும், அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படும் வேலையின்மை குறித்தும் நுணக்கமான விவரணைகளை அளிக்கிறது. அப்படி ஒரு பெரும் பொருளாதாரக் குற்றத்தைப் படம் அம்பலப்படுத்தப் போகிறதோ என்ற தோற்றத்தை எழுப்பி, தனிமனித...