Shadow

Tag: நிமிஷா சஜயன்

டிஎன்ஏ விமர்சனம் | DNA review

டிஎன்ஏ விமர்சனம் | DNA review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது. காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாகி மீளும் ஆனந்திற்கும், BPD எனப்படும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் கொண்ட திவ்யாவிற்கும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும், அம்மகவைக் கையில் வாங்கும் திவ்யா, அது தன்னுடைய குழந்தை இல்லை எனச் சொல்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என அனைவரும் திவ்யாவை நம்பாத பொழுது, ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதை நம்பித் தனது குழந்தைக்காகப் போராடத் தொடங்குகிறான். சுழலில் சிக்கியது போல், ஆனந்தின் அந்தத் தேடலும் போராட்டமும் அவனை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. திவ்யாவின் மீது ஆனந்த் வைத்த நம்பிக்கை வென்றதா இல்லையா என்பதே படத்தின் முடிவு. ஃபர்ஹானா படத்தில், வசனங்களுக்காக மனுஷ்யபுத்திர...
“மனித உணர்வுகளை நுட்பமாகச் சொல்லக்கூடியவர் நெல்சன் வெங்கடேசன்” – கார்த்திக் நேத்தா | நிமிஷா சஜயன் | DNA திரைப்படம்

“மனித உணர்வுகளை நுட்பமாகச் சொல்லக்கூடியவர் நெல்சன் வெங்கடேசன்” – கார்த்திக் நேத்தா | நிமிஷா சஜயன் | DNA திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ''இந்த மேடையில் வியப்பாகவும், சிலிர்ப்பாகவும் சொல்ல நினைப்பது இயக்குநர் நெல்சனைப் பற்றி தான். அவரிடம் தொடர் இலக்கிய வாசிப்பு இருக்கிறது. சமகாலத்தில் சமூகத்தின் அசைவுகளை அவதானித்து, அதில் தன்னுடைய பார்வையைப் பதிவு செய்வதில் தீவிரமானவர். அத்துடன் உலகத் திரைப்படங்களையும் தீவிரமாகப் பார்க்கக் கூடியவர். இத்தகைய அனுபவங்களில் ஊறி வெளியாகும் படைப்புதான் இது. அவருடன் பாடல் எழுதும் போது பாடலுக்காக அவர் விவரிக்கும் சூழல் வாழ்க்கைக்கான கொண்டாட்டமாக இல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்குள் இருக்க...
நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’ திரைப்படம்

நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’ திரைப்படம்

சினிமா, திரைத் துளி
பல கதாபாத்திரங்களில் தனது பன்முக நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதில் நிமிஷா சஜயன் ஆர்வம் கொண்டவர். 'சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'போச்சர்' இணைய தொடர் என தானேற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களின் ஆன்மாவையும் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் இப்போது ‘என்ன விலை’ என்ற புதிய தமிழ்ப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் த்ரில்லர் அம்சங்களுடன் கூடிய ஒரு ஃபேமிலி டிராமா ஆகும். திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாசில் நடிப்பில் விமர்சன மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' திரைப்படத்தின் அசாதாரண திரைக்கதைக்குப் புகழ் பெற்ற சஜீவ் பழூர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் சிறந்த திரைக்கதைக்காக, சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதைய...
மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா விஜயன், பரத் போபண்ணா, அபிஹாசன், பேபி இயல், விராஜ், ஜேஷன் ஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “மிஷன் சாப்டர் -1”.பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ மீது அதிகமான எதிர்பார்ப்புகள் குவிந்திருக்க, சத்தமில்லாமல் வந்து சாதித்துக் கொண்டிருக்கும் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானதும், ஆங்காங்கே அடுத்து என்ன…? என்கின்ற எதிர்பார்ப்பை அழகாக படத்தின் திரைக்கதையில்  அடுக்கி ப்ரசண்ட் செய்திருக்கும் விதமும் படத்திற்கு பலமாக மாறியிருக்கிறது.ஆரம்பத்தில் என்னடா இது, நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற பரிதவிப்பைக் கொடுத்து கொஞ்சமாய் கலங்கவிட்டாலும், அடுத்தடுத்து வந்த காட்சிகளில் ஹீரோ ...
”மிஷன் சாப்டர் 1ல் ஆக்‌ஷன் காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை அல்ல” – அருண் விஜய்

”மிஷன் சாப்டர் 1ல் ஆக்‌ஷன் காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை அல்ல” – அருண் விஜய்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே)' டிரெய்லர் அவரது ஆக்‌ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கிய இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நடிகர் அருண் விஜய் படம் குறித்து கூறும்போது, ​​“எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்‌ஷன்களை விட இந்தப் படத்தில் ஆக்‌ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். 'மிஷன் சாப்டர் 1' படத்தில் பல எமோஷன் உள்ளது. பல திருப்பங்களோடு பர்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரையங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பெயருக்காக நாங்கள் எ...
சித்தா விமர்சனம்

சித்தா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிறு குழந்தைகள் கைகளில் போன் கொடுப்பதும், அவர்கள் போனில் இருக்கும் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தலாம் என்பதை பதைபதைப்புடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பேசி இருக்கிறது “சித்தா”  திரைப்படம்.  சித்தப்பா என்பதை சுருக்கி “சித்தா, சித்தா” என்று கூப்பிடுவதையே  படத்தின் தலைப்பாக வைத்திருக்கின்றனர்.அண்ணன் மறைவுக்குப் பின்னர் தன் அண்ணி மற்றும் அவர்களின் 8 வயது குழந்தையுடன் வாழும் ஈஸ்வரனாகிய சித்தார்த்தின் வாழ்க்கை இயல்பான மகிழ்ச்சியுடன் செல்கிறது. சிறுவயதில் தொலைத்த காதலியும் கூட எதிர்பாராவிதமாக மீண்டும் சித்தார்த் வாழ்க்கையில் வந்து ஐக்கியம் ஆகிறாள்.  சித்தார்த்திற்கு தன் அண்ணன் மகள் ஈஸ்வரி என்றால் உயிர்.  அது போல் சித்தார்த்தின் பள்ளிகாலத் தோழன் வடிவேலுவுக்கு அவனின் அக்கா மகள் வைஷ்ணவி என்றால் உயிர். இவர்கள் எல்லோரும் ஒரு குடும்பம் போல் மகிழ்ச்சியாக வாழ்...