
புத்தம்புது காலை விடியாதா… விமர்சனம்
முதல் லாக்-டவுனை அடிப்படையாகக் கொண்டு, 'புத்தம்புது காலை' எனும் ஐந்து குறும்படங்கள் கொண்ட ஆன்தாலஜி திரைப்படம் வெளியானது. தற்போது, பொங்கல் 2022 இன் சிறப்பு வெளியீடாக, 'நியூ நார்மல்' ஆகிவிட்ட இரண்டாவது லாக்-டவுனை மையமாக வைத்து, 'புத்தம்புது காலை விடியாதா..' எனும் ஆன்தாலஜி திரைப்படம் வெளியாகியுள்ளது. காதல், சுற்றி இறுக்கும் தனிமை, உற்றாரின் இழப்புகள், அவர்களது நினைவுகள் தரும் தாக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் படம்.
லாக்-டவுனையும் 'மாரி'த்தனமாக விளையாட்டாக அணுகியுள்ளார் இயக்குநர் பாலாஜி மோகன். அவரது முககவச முத்தம் என்ற குறும்படம், லாக்டவுன் இல்லா நாட்களுக்கும் பொருந்தும். அதாவது, பசுமாட்டைத் (காதல் கதை) தென்னை மரத்தில் (லாக்-டவுன்) கட்டிவிட்டார்.
இயக்குநர் ஹலிதா ஷமீமின் 'லோனர்ஸ்' படத்தில், பிரேக்-அப் ஆன ட்ராமாவில் இருந்து மீளாத நல்லதங்காளும், தன் வலியை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாமல்...