நந்தன் | மண்ணின் வேதனையைப் பதிவு செய்த சினிமா
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் - இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இந்தப் படத்திற்காக யோசித்து வைத்திருந்தார் இயக்குநர் இரா. சரவணன். அவரில்லாத பட்சத்தில், அவருக்கு நிகரான ஒருவர் வேண்டுமென ஒளிப்பதிவாளர் சரணை அணுகியுள்ளார் இயக்குநர். ஒளிப்பதிவாளர் சரண், " 'கிடாயின் கருணை மனு', 'விழித்திரு' திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள்...