Shadow

Tag: நீமா ரே

இரவின் விழிகள் விமர்சனம் | Iravin Vizhikal review

இரவின் விழிகள் விமர்சனம் | Iravin Vizhikal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பார்வையாளர்களை ஈர்க்கவும், அதன் மூலம் புகழ் பெறவும், எதையாவது கன்டென்ட்டாக்கி வீடியோ போட்டுத் தொடர்ந்து லைம்லைட்டிலேயே இருக்க நினைக்கும் யூட்யூபர், எக்ஸ், இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்களைச் சாடியுள்ளார். ஒரு விஷயத்தின் உண்மை நிலையைப் பற்றி எதுவும் அறியாமலே ஒரு கருத்தை மிக வலுவாகப் பொதுச் சமூகத்தில் விதைத்து விட முடிகிறது இந்த சோஷியல் மீடியா செலிபிரட்டிகளால். அதனால் தவறே இழைக்காதவர்கள் வீண் பழி சுமக்க வேண்டி வருகிறது. இத்தகையவர்களைத் தேடிக் கொல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அவன் முதலில் கொல்வது, பிளாக்மெயில் ஜர்னலிசம் செய்யும் சரக்கு சங்கர் என்பவரை. அந்த சைக்கோ கொலைகாரனிடம் யூட்யூபர்களான கர்ணாவும் ரேஷ்மாவும் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தப்பித்தார்களா, ஏன் அவனை சைக்கோ கொலைகாரன் கொல்லத் துடிக்கிறான் என்பதற்குப் பதிலுடன் நிறைவுறுகிறது படம். படத்தின் முதற்பாதியைச் சகித்துக் கொள்ள ஓர் அசாத்திய திடம்...