Shadow

Tag: நீலிமா ராணி

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே விமர்சனம்

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
”காதல் ஒரு கடலு மாறி டா” என்றார் நம்மவர் கமல்ஹாசன். உண்மைதான். கடலின் பிரம்மாண்டமும், ஆழமும், அதனுள் அமிழ்ந்திருக்கும் ஜீவராசிகளும் நம் கண்களுக்கு மாத்திரமல்ல, நம் மனதிற்கும் அறிவிற்கும் கற்பனைக்குமே அப்பாற்ப்பட்டவை. அப்படித்தான் காதலும்.  எவருக்கு, எவரின் மேல், எதற்கு, எப்படி, எப்பொழுது இப்படி எந்தவொரு கேள்விக்குமே விடை கூற முடியாத கடலுக்கு இணையான பிரம்மாண்டமும், ஆழமும், விநோதமும் கொண்ட புரியாத புதிர் தான் “காதல்”.  அப்படி ஒரு இயல்புக்கு மீறிய,  சொல்வதற்கே இன்றும் மக்கள் கூச்சப்படும், இதுவரை ஓரிரு படங்களைத் தவிர்த்து பெரும்பாலான படங்களில் யாரும் பேச முன்வராத ஒரு காதலை, ஒரு அன்பை, காமத்தின் மற்றொரு வடிவத்தை துணிச்சலாகப் பேசி இருக்கும் திரைப்படம் தான் “வாழ்வு தொடங்கும் இடம் நீதானே”.நடிகை நீலிமா ராணியும் அவர் கணவர் இசையும் இணைந்து, இசை பிக்சர்ஸ் சார்பாக Shortflix OTT தளத்திற்காக தயார...