
புதுமையான முறையில் டிக்கெட் விற்பனை – கூத்தன் தயாரிப்பாளர்
நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் "கூத்தன்". இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3 அன்று நிகழ்ந்தது.
விழா மேடையிலேயே புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன், "ஒரு மிகப்பெரும் பிரம்மாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகரகளைப் பிரம்மாண்டமான படம் பார்க்கும் உணர்வைத் தர நினைத்து இந்தப் படம் தயாரித்துள்ளேன். எந்த விசயத்திலும் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது மிகப்பெரும் விசயமாகிவிட்டது. அதை மாற்றி இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு செல்லவும், இதை வெற்றிப்படமாக்கவும் டிக்கெட் முறையில் புதுமுறையை அறிமுகப்படுத்த உள்ளேன்.
ஒரு புதிய ஐடியாவாக படத்தின் டிக்கெட்டை நானே என் நண்பர்கள் மூலமாகவும் என் நலம் ...