Tag: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்
யூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்யும் சிவாவிடமும் விக்கியிடமும், ஜிப்பா போட்ட ஒரு பணக்காரர் மூன்று டாஸ்குகளை முடித்தால், அவர்கள் எதிர்பார்க்கும் பணத்தைக் கொடுத்துக் கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என வாக்கு கொடுக்கிறார். அந்த மூன்று டாஸ்க்கள் என்ன, அதை எப்படி அவர்கள் முடிக்கின்றனரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை.
'ப்ளாக் ஷீப்' யூ-ட்யூப் சேனலில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ள படக்குழு. படத்திலும் அதன் தொடர்ச்சியாக, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்ற யூ-ட்யூப் சேனல் நடத்துபவர்களாக பிரதான கதாபாத்திரம் இருவரையும் வடிவமைத்துள்ளனர். படத்தின் இடைவேளைக்கு முன்பு, ஓர் அமைச்சர் டாஸ்மாக் கடையை மூட உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு காட்சி வரும். அது வரை அமெச்சூர்களின் கன்னி முயற்சியில் வந்து சிக்கிக் கொண்டோம் என எரிச்சலுடன் நெளிய வைக்கிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் அடிக்கும் ஓபியையும், மொக்கையையும் மருந்துக்கு...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்
பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரைப் பற்றிப் புகழ்ந்து சொல்ல அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் 'பக்கத்து வீட்டுப் பையன் (Boy Next Door)'.
அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படுவர். ஆனால் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே 'நம்ம வீட்டு பசங்க' என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கார்த்திக் வேணுகோபாலன், "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்க...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – 90% நகைச்சுவை திரைப்படம்
கனா படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. அந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’வைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவையையும், ரசிக்கக் கூடிய சுவாரசியமான தருணங்களையும் கொண்டிருக்கும். கூடவே நல்ல ஒரு மெஸ்சேஜுமுண்டு" என்றார்.
ஒட்டுமொத்த படக்குழுவுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றிக் கூறும்போது, "இது ஒரு அமைதியான மற்றும் அழகான அனுபவம், எல்லோரும் அதனை முழுமையாக அனுபவித்தோம். ரியோ ராஜின் அலட்டல் இல்லாத, மிகச் சிறப்பான நடிப்பு அவர் கதாபா...