நெடுநீர் விமர்சனம்
நெடுநீர் என்றால் கடல் எனப் பொருள்படும். கடலூரைக் கதைக்களமாகக் கொண்ட படம் என்பதால் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. கதையின் நிகழ்வும் கடலும், கடல் சார்ந்த பகுதிகளிலுமே நடக்கிறது.
தனது தந்தையிடம் இருந்து சிறுமியான அமுதாவைக் காப்பாற்ற, அப்பாவைத் தாக்கிவிட்டு அமுதாவுடன் ஓடி விடுகிறான் சிறுவன் கருப்பசாமி. இருவரும் பிரிந்துவிட, இளைஞனாகும் கருப்பு பல குற்றச்செயல்களில் ஈடுபடுகிறான். பகைமையைச் சம்பாதித்துக் கொள்ளும் கருப்பைக் கொலை செய்ய, தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்படும் பொழுது, அமுதாவின் கண்களில் விழுகிறான். கொலைகாரனாக உருமாறி இருக்கும் கருப்புவும், அமுதாவும் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதே நெடுநீர் படத்தின் கதை.
தனது உயிரைக் காக்கும் கருப்பசாமியைக் காப்பாற்றி, அண்ணாச்சி அவனைத் தனது வளர்ப்பு மகன் போலவே வைத்துக் கொள்கிறார். அவரது தொழில் வாரிசாக அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்துகிறார். தனது நண்...