Shadow

Tag: நைனா சர்வார்

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உச்ச நடிகரான பவர் ஸ்டாருக்கு, மதுரையில் அதி தீவிர ரசிகர்களாக சிம்மக்கல் சேகர், கோரிபாளையம் ரஹமத், பழங்காநத்தம் பாபு ஆகியோர் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல்படி, ‘பாகுபலியும் பாயும்புலியும்’ என்ற பவர் ஸ்டாரின் படத்தை மதுரை ஏரியா வினியோகத்திற்கு எடுத்து ஓட்டாண்டி ஆகுகின்றனர். தன் உயிரினும் மேலான தலைவனைப் போய்ப் பார்க்கின்றனர். தலைவரோ உதாசீனப்படுத்தி விட, அவமானப்படுத்தப்படும் மூன்று ரசிகர்களின் எதிர்வினை தான் படத்தின் கதை. ‘பாட்ஷா’ பட ரஜினி பாணியில் அறிமுகமாகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். பின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரையும் ‘ஸ்பூஃப்’ செய்யும் காட்சிகள் வருகிறது. தொடக்கத்தில் இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் படம் அதன் பின் தடுமாறத் தொடங்கி, அதையே கடைசி வரை செய்கிறது. ‘ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க..’ என நீளமான பெயர் தாங்கிய மருத்துவராக மன்சூர் அலி கான...