சல்மான் கான் – நட்புக்குத் தோள் கொடுத்த பயில்வான்
பாலிவுட்டின் பேரரசன் சல்மான் கான் கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தின் விளம்பரத்திற்குத் தோள் கொடுத்துள்ளார். பயில்வான் படத்தின் பாக்ஸர் கதாபாத்திர லுக்கை, தனது சுல்தான் படத்து கதாபாத்திர போஸைத் தந்து பயில்வான் படத்தைப் பிரபலப்படுத்தியுள்ளார் சல்மான் கான்.
சல்மான் கானுடன் தபாங் 3 படத்தில் திரையில் இணைந்து நடித்து வரும் கிச்சா சுதீப் இது பற்றிக் கூறியபோது, “சல்மான் கானின் இந்த நட்பு ரீதியிலான, தன்னலமற்ற அன்பு விலைமதிப்பற்றது. அவர் “பயில்வான்” படத்தைப் பிரபலப்படுத்தியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையுன் தந்துள்ளது" என்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது....