‘மதுரமு கதா’ பாடல் | ஃபேமிலி ஸ்டார்
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் "தி ஃபேமிலி ஸ்டார்" திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மதுரமு கதா' பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள ‘மை ஹோம் ஜூவல் கேட்டட் கம்யூனிட்டி’யில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, ‘மை ஹோம் ஜூவல்’ குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோலி பண்டிகை நாடகம், நடனம் மற்றும் திரைப்படக் குழுவினருடன் புகைப்படங்கள் எனக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தயாரிப்பாளர் தில் ராஜு, "எங்கள் 'தி ஃபேமிலி ஸ்டார்' படக்குழுவை உற்சாகமாக வரவேற்ற அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி. 'தி ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகிறது. 'தி ஃபேமிலி ஸ்டார்' என்றால் என்ன என்பதை அ...