Shadow

Tag: பழைய ஜோக் தங்கதுரை

பேபி & பேபி – இசை வள்ளல் இமானின் இசையில்

பேபி & பேபி – இசை வள்ளல் இமானின் இசையில்

சினிமா, திரைச் செய்தி
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் நகைச்சுவைக் கலாட்டா தான் இந்தப் படம். தயாரிப்பாளர் யுவராஜ், “எனக்குத் தொழில் சினிமா இல்லை. ஆனால் சினிமா மீது சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்குக் கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான...
பூமர் அங்கிள் விமர்சனம்

பூமர் அங்கிள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்வதேஷ் MS. சேஷு, பழைய ஜோக் தங்கதுரை, KPY பாலா, ரோபோ ஷங்கர், யோகிபாபு ஆகியோர் 90’ஸ் கிட்ஸ். இதில், யோகிபாபுவிற்கு மட்டும் கல்யாணமாகிவிட, அவரால் கல்யாணமாகாமல் இருக்கும் மற்றவர்கள், யோகிபாபுவைப் பழிவாங்க அவரது மாளிகைக்குள் களமிறங்குகின்றனர். மாளிகைக்குள் நடக்கும் கலாட்டாவே படத்தின்கதை. யோகிபாபுவின் மனைவி ரஷ்ய உளவாளி. யோகி பாபுவின் தந்தையான மதன் பாப் கண்டுபிடித்த ஆயுதங்களைத் திருடுவதே அவரது நோக்கம். மதன் பாப் கண்டுபிடித்த சில ஆயுதங்களை அமெரிக்க அரசு திருடி ஸ்பைடர் மேன், ஹல்க், தோர் ஆகியோரை உருவாக்கிவிட்டனராம். படம் பார்க்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ரசிகர்கள் நிலைமை தான் அந்தோ பரிதாபம். நகைச்சுவையாகவோ, கலகலப்பாகவோ கூடக் கொண்டு போகாமல், சகிக்கமுடியாதளவு கடியை ஏற்படுத்தும் மிகவும் சிரத்தையற்ற திரைக்கதையை எழுதியு...
பன்னிகுட்டி விமர்சனம்

பன்னிகுட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கருணாகரன், யோகிபாபு, சிங்கம்புலி, விஜய் டிவி ராமர், பழைய ஜோக் தங்கதுரை, திண்டுக்கல் லியோனி, T.P.கஜேந்திரன் ஆகியோரோடு ஓர் அழகான பன்னிகுட்டியும் நடித்துள்ளது. வேலையில்லா உத்ராவதிக்குத் தொட்டதெல்லாம் பிரச்சனையாகத் தெரிய, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தூக்கு மாட்டிக்க பலமுறை முயல்கிறார். அவரை ஒருமுறை காப்பாற்றும் ப்ரூனே, கோடாங்கியிடம் அழைத்துச் செல்கிறார். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அவர் சொல்லும் பரிகாரத்தைச் செய்ததும், அவரது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நல்லது நடக்கிறது உத்ராவதிக்கு. மகிழ்ச்சியில் கோடாங்கிக்கு நன்றி சொல்ல வரும் வழியில், பன்னிக்குட்டி ஒன்றின் மீது மோதி விடுகிறார் உத்ராவதி. அப்பன்னிக்குட்டியின் மீது மீண்டும் வண்டியில் மோதினால்தான் நடக்கும் நல்லது தொடரும், இல்லையெனில் நிலைமை மேலும் மோசமாகிவிடும் எனச் சொல்லி விடுகிறார் கோடாங்கி. திட்டாணிக்குக் கல்யாணம் நடக்கவேண்டுமெனில், ராணி எனும்...
மெய் விமர்சனம்

மெய் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெய் - உடல். மனித உடலுறுப்புகளை இல்லீகலாக மருத்துவச் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுவதை மையப்படுத்திய மெடிக்கல் க்ரைம் வகை படம். அமெரிக்க மருத்துவரான அபினவ், தாயின் இழப்பை மறக்க இந்தியா வருகிறார். சென்னையில் நடக்கும் உடலுறுப்புக் குற்றக் குழுவின் வலையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. நாயகனான நிக்கி சுந்தரம், டி.வி.எஸ். சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப்பேரன் ஆவார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த நிக்கி சுந்தரம், முறையாகத் தமிழும் நடிப்பும் பயின்று இப்படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கான டெய்லர்-மேட் படமாகத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.ஏ.பாஸ்கரன். கதைக்கு அவர் பொருந்தினாலும், அவரது நடிப்பு படத்திற்குக் கொஞ்சம் பின்னடைவே! ஓர் அந்நியத்தன்மையை அவரது தோற்றம் ஏற்படுத்துகிறது. தன் மகளைக் காணாமல் தேடித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சார்லி இயல்பாக நடித்துள்ள...