
Tourist family | 16 வயது பையன்க்கு அப்பாவாகச் சசிகுமார்
சசிகுமார், சிம்ரன் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார்.
தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் மோகன் ராஜன், '' 'ஈசன்' திரைப்படத்தில் இடம்பெற்ற, 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து..' எனும் பாடல...