Shadow

Tag: பாட்டையா

பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

கட்டுரை
யாரும் எதிர்பாராத சமயத்தில், திடீரென குழந்தை ‘தாத்தா’ என மழலையில் அழைத்து அவரைப் பரவசத்தில் ஆழ்த்தும். “இன்னொரு முறை அப்படிக் கூப்பிடுடா கொழந்த?” என தாத்தா ஆசையாகக் கேட்டால், அவரைக் கண்டுக்காமல் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடும் குழந்தை. அது குழந்தையின் வெட்கமா அல்லது போதுமென்ற குழந்தையின் ஞானமா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அக்குழந்தையைப் போல்தான், எவரும் எதிர்பார்க்காத சமயத்தில் அனைவரையும் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ எனும் தன் புத்தகத்தால் பரவசத்துக்கு உள்ளாக்கினார் பாட்டையா. அவருக்கு ஏற்பட்ட இன்ஃபைனட் அனுபவங்களின் ஒரு சிறு துளிதான் அப்புத்தகம். ‘ஒரு துளி போதுமா பாட்டையா? கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கிற இந்தக் காலத்தில் ஏன் இந்தக் கஞ்சத்தனம்? தளும்பும் நினைவுக் கடலில் இருந்து ஒரு டம்ளராவது இறக்கிட வேணாமா?’ என பலர் கேட்டுப் பார்த்தனர். ஆனால் பாரதி மணியோ, “I am one book wond...