
சூரகன் விமர்சனம்
ஒரு விபத்தில் கண் பார்வை பாதிப்புக்குள்ளான நாயகன், அதை மறைத்து போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார். அவரின் கண் பார்வை குறைபாட்டால் ஒரு அப்பாவிப் பெண் பலியாகிவிட, நாயகன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். அதே நேரம் ஒரு உயிர் போய்விட்டதே என்கின்ற குற்றவுணர்ச்சி மேலெழ நாயகன் விரக்தியுடன் இருக்கிறார். அந்த சூழலில் சாலையில் அடிபட்டுக் கிடந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தும் அப்பெண்ணையும் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. இந்த குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொள்ள நாயகன், சாலையில் அடிபட்டுக் கிடந்த பெண் சாவில் இருக்கும் மர்மத்தை உடைத்து தன் குற்றவுணர்வில் இருந்து விடுபட நினைக்கிறான். அந்த இளம்பெண் மரணத்தின் பின்னால் இருக்கும் நபர்களை நாயகன் கண்டறிந்தானா..? தன் குற்றவுணர்ச்சியில் இருந்து விடுபட்டானா..? என்பதை விளக்குகிறது திரைக்கதை.ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம். அதன் பின்னா...