Shadow

Tag: பாபி சிம்ஹா

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. பாஜகவைச் சார்ந்த குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார். முதல் பாதி முழுவதுமே, காணச் சகியாக் காட்சிகளாகவே உள்ளன. ஊரைக் கொளுத்துவது, பெண்களைப் பலாத்காரம் செய்வது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என ரஸாக்கர்களின் கொடுமையை விரிவாகக் காட்டுகின்றனர். வரலாற்றைத் தெர...
”கதை கேட்ட போது,  உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாறு சரியாக புரியவில்லை.” பாபி சிம்ஹா

”கதை கேட்ட போது,  உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாறு சரியாக புரியவில்லை.” பாபி சிம்ஹா

திரைச் செய்தி
 சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது.இந்நிகழ்வினில்..தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான, ...
சலார் விமர்சனம்

சலார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கே.ஜி.எஃப் 1 & 2 திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அடுத்த படம். பிரபாஸுடன் ஈணைகிறார் என்பதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறிப் போய் கிடந்தது. அந்த எதிர்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம். மிகப்பெரிய வெற்றிப் த படம் “சலார்”. பாகுபலி நாயகன் பிரபாஸும் பிரசாந்த் நீல் உடன் இணைந்ததால் படத்தின் மீதாபடங்களை கொடுக்கும் இயக்குநர்களுக்கு எப்போதும் வரும் சிக்கல் தான் பிரசாந்த் நீலுக்கும் வந்திருக்கிறது. கே.ஜி.எஃப் திரைப்படத்தை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்கின்ற அழுத்தத்திலேயே படம் எடுத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சரி அழுத்தம்  இருக்கும் தான்.. அதற்காக கே.ஜி.எஃப் திரைப்படத்தை மீண்டும் அப்படியே எடுத்து வைத்தால் எப்படி..? கே.ஜி.எஃப் திரைப்படத்தில் என்னவெல்லாம் இருந்ததோ அது எல்லாம் “சலார்” தி...
தக்ஸ் விமர்சனம்

தக்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘ஸ்வாதந்த்ரியம் அர்த்தராத்திரியில்’ எனும் மலையாளப் பட்த்தைத் தழுவி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிருந்தா. இரண்டாவது படத்திலேயே, சிறையிலிருந்து தப்பித்துச் செல்லும் ப்ரிஸன் ப்ரேக் (Prison Break) வகைமை படத்தை இயக்கி ஆச்சரியப்படுத்துள்ளார் பிருந்தா. ‘ஹே சினாமிகா’ எனும் அவரது முதற்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். பணத்தைத் திருடிய குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்படுகிறான் சேது. தனது காதலியோடு ஆஸ்திரிலேயா செல்லத் திட்டமிட்டு மாட்டிக் கொள்கிறான். சிறையில் இருந்து தப்பித்து மீண்டும் காதலியோடு நாட்டை விட்டுச் செல்வதற்காகச் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றான். அதற்காகத் தனது சக அறைவாசிகளைச் சம்மதிக்க வைத்துத் தனது தப்பிக்கும் திட்டத்தை அரங்கேற்ற நினைக்கிறான். சிறை கண்கணிப்பாளர் ஆரோக்கியதாஸாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். சிறைக்கைதிகளைத் தனது கட்...
பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’

பாபி சிம்ஹாவின் ‘தடை உடை’

சினிமா, திரைத் துளி
நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் 'தடை உடை' என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, சண்டைக்காட்சிகளை கணேஷ் அமைக்கிறார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் 'தடை உடை' படத்தை முத்ராஸ் பிலிம் பேக...
மகான் விமர்சனம்

மகான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காந்தியக் கொள்கைகளின்பால் பிடிப்புக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், நாயகனுக்கு ‘காந்தி மகான்’ எனப் பெயர் வைக்கப்படுகிறது. அச்சிறுவனின் முதுகு தோள் உரிக்கப்பட்டு காந்தியக் கொள்கைகள் திணிக்கப்படுகிறது. உள்ளூற உணர்ந்து, விருப்பத்துடன் இல்லாமல் கடமைக்கெனக் காந்தியத்தைக் கடைபிடிக்கப்படுவதால் ஏற்படும் அழுத்தம், ஒருநாள் நீர்க்குமிழி போல் வெடிக்கிறது. அதன் பின் காந்தி மகான் வாழ்க்கை எதிர்பாராத திசையில் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது. அவ்வெள்ளத்தைத் தடுக்கும் அணையாக, மகானின் மைந்தன் ‘தாதா’பாய் நெளரோஜி வந்து சேருகிறான். காந்தியக் கொள்கைகளைத் தூக்கி அவன் முதுகிலும் வைத்து வளர்த்து விடுகிறார்கள். காந்தியத்தைச் சுமக்க முடியாமல் தவிக்கும் தாதா, வன்முறையில் அதற்கான வடிகாலைக் காணுகிறான். பெருங்கோபத்தோடு வரும் தாதாவை, மகான் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தில், காந்தியத்தை ம...
சாமி² விமர்சனம்

சாமி² விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சாமி படத்தின் அடுத்த பாகமாக சாமி ஸ்கொயர் வந்துள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு ஜம்ப் எடுத்து ஆறுச்சாமியின் வாரிசு, பெருமாள் பிச்சையின் வாரிசுகளை வேட்டையாடுவதுதான் படத்தின் கதை. ஆறுச்சாமியே வேட்டையாடி இருந்தால் அது சாமி 2 ஆக இருந்திருக்கும். ராம்சாமிக்குள், ஆறுச்சாமியின் ஆவி புகுந்து வேட்டையாடுவதால் படத்திற்கு சாமி ஸ்கொயர் என்ற குறியீட்டுப் பெயர் சாலப் பொருந்தும். சாமி படத்தின் பலம் அதன் வில்லனான கோட்டா ஸ்ரீநிவாச ராவ். அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் ஆளுமையான வில்லன். உடற்பல பராக்கிரமத்தை மட்டும் நம்பும் வெற்றுக் கூச்சலில்லாதவர் பெருமாள் பிச்சை. அவருக்கு மாற்றாக 'பிச்சை க்யூப்' என மூன்று வில்லன்களை இறக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இளைய மகன் ராவணப் பிச்சையாக பாபி சிம்ஹா; மூத்த மகன் மகேந்திரப் பிச்சையாக ஓ.ஏ.கே.சுந்தர்; இடையில், தெய்வேந்திர...
திருட்டுப்பயலே – 2 விமர்சனம்

திருட்டுப்பயலே – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அவன் இவன் ரகசியத்தை, இவன் அவன் அந்தரங்கத்தை என ஒருவரை ஒருவர் தொழில்நுட்பத்தின் உதவிக் கொண்டு உளவு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவனா, இவனா, வல்லவன் எவனோ அவனே வெல்வான் என்பதுதான் படத்தின் கதை. உளவுத்துறைப் பிரிவைச் சேர்ந்த ஒட்டு கேட்கும் காவல்துறை அதிகாரி செல்வமாக பாபி சிம்ஹா நன்றாக நடித்துள்ளார். அவரொரு காட்சியில், தன் அம்மாவின் கையைப் பிடித்தவாறு, "தொழில்நுட்பம் கொல்லுதும்மா" என்பார். அது தான் படத்தின் மையச் சரடு. நம்மைச் சுற்றிச் சுற்றி ஆயிரம் கண்களுடனும், ஆயிரம் செவிகளுடனும் இருக்கும் தொழில்நுட்பத்தில் இருந்து ஓடவோ ஒளியவோ முடியாது என்பதுதான் படம் அச்சுறுத்தும் உண்மை. கூடவே வாழ்ந்தாலும், தன் மனைவி அகல் விளக்கின் ரசனைகள் பற்றி பாபி சிம்ஹாவிற்குப் பெரிதாய்த் தெரிவதில்லை. ஆனால், அகல்விளக்கிற்கு ஃபேஸ்புக்கில் நண்பராய் இருக்கும் பால்கி எனும் பாலகிருஷ்ணனுக்கு எல்லாம் தெரிகிறது. அகல்விளக்க...
கருப்பன் விமர்சனம்

கருப்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை. வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் கதைமாந்தர்கள் தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, 'ஆலுமா டோல...
பாம்புசட்டை விமர்சனம்

பாம்புசட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே போல், தேவையின் பொருட்டு நல்லவன் எனும் சட்டையைக் கழட்ட நிர்பந்திக்கப்படுகிறான் நாயகன். நாயகன் தன் சட்டையை உரித்துக் கொள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளியாக சார்லி நடித்துள்ளார். ஒரே ஒரு சோற்றுப் பருக்கையைக் கீழே சிந்திவிடும் தனது இளைய மகளிடம், 'அரிசியைக் குப்பைக்குப் போக விடலாமா?' என அவர் நீண்ட தர்க்கத்துடன் கேட்கும் கேள்விக்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. சமீபமாய் வரும் படங்களில் சார்லி தான் ஏற்கும் குணசித்திர கதாபாத்திரங்களால் பெரிதும் ரசிக்க வைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், சாமானிய மனிதர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. நகைக் கடையில் வேலை செய்யும் பானு, கார்மென்ட்ஸில் வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷ், ஷேர் ஆட்டோ டிரைவர் நிவாஸ் ஆதித்தன், ஃபைனான்ஸ் குருசோம...
கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக்...
இறைவி விமர்சனம்

இறைவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெண்களை, குறிப்பாக மனைவியை ஆண்கள் எப்படி நடத்துகிறார்கள்? கணவனின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மனைவி எனும் இறைவிகளுக்கு இருக்கும் பொறுமை, அனுசரணை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம் போன்றவை ஆண்களுக்கு உண்டா என்ற கேள்வியை முன் வைக்கிறது படம். பள்ளி மாணவி பொன்னி, புதிதாகத் திருமணமாகும் ஐ.டி. துறை ஊழியை யாழினி, மூத்த மகனின் திருமணத்தில் களைத்திருக்கும் மீனாக்ஷி ஆகிய மூன்று பெண்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்திருக்கும் ஆண்களையும் பற்றிய கதை இது. தயாரிப்பு நிறுவனங்களின் லோகோ போடும்பொழுதே எழும் மழையின் பின்னணி இசை, நம்மை ஏதோ ஓர் அனுபவத்திற்காகத் தயார்ப்படுத்துகிறது. பொன்னி, யாழினி, மீனாக்ஷி ஆகிய மூவருக்கும் மழையில் இறங்கி நனைய ஆசை இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சூட்சமத் தளைகள் அவர்கள் நனைவதைத் தடுத்து கையை மட்டும் நீட்டி மழையைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கிறது. இம்மூவரில், ஒருவரை மட்ட...
கோபமும் ஆதங்கமுமாக கோ-2 பாபி சிம்ஹா

கோபமும் ஆதங்கமுமாக கோ-2 பாபி சிம்ஹா

சினிமா, திரைத் துளி
ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிக்கும் கோ – 2 படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இயக்குநர் விஷ்ணுவர்தனின் ‘பில்லா’, இயக்குநர் சக்ரி டோலேட்டியுடன் ‘பில்லா’ 2 முதலிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ள சரத் ,இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'இந்தப் படத்தில் நான் ஒரு துடிப்புள்ள, உணர்ச்சிகரமான பத்திரிகையாளன் வேடத்தில் நடிக்கிறேன். அந்த மாநிலத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஒருவருடன் என் சுயநலம் அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில் நான் போராடும் காட்சிகள் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. தப்பென்று பட்டால் யாரென்று பாராமல் போராடும் இந்தக் கதாபாத்திரம் ஏறக்குறைய என்னுடைய குணத்தை ஒட்டியிருப்பது எனக்குப் பெருமைதான். 'கோ 2' படத்தில் என்னுடைய இந்தக் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் தெள்ளத் தெளிவ...
மசாலா படம் விமர்சனம்

மசாலா படம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விமர்சனம் என்ற பெயரில், தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் முடியும் முன்பாகவே, கிழிக்கிழி எனக் கிழிக்கும் பதிவர்களையும் (Bloggers), ஃபேஸ்புக் பயனர்களையும், ட்வீட் போடுபவர்களையும் பகடி செய்வது போல் தொடங்குகிறது படம். இணைய விமர்சகர்களைக் கலாய்த்து ஒரு படமா? அடடே.. ‘செத்தான்டா சேகர்’ என விமர்சகர்களுக்காக உச்சுக் கொட்டும்போது ட்விஸ்ட் வைத்து விடுகின்றனர். அங்கே ‘கட்’ செய்தால் இடைவேளை. படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே இடைவேளை வந்துவிட்டதே என ஆச்சரியப்பட வைக்கிறது. படத்தின் மொத்த நீளமே 110 நிமிடங்கள்தான். ஆறு மாதத்துக்குள் ஒரு கதை சொல்லவேண்டும் என விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர் ஒரு சவால் விடுக்கிறார். அந்தக் கதையை, பெரிய ஹீரோ பெரிய இயக்குநர் வைத்து தயாரிப்பதாகவும் ஒத்துக் கொள்கிறார். இரண்டாம் பாதியில், விமர்சகர்களின் கதைத் தேடலில் படம் தொடங்குகிறது. கதையில் எதார்த்தம் வேண்டும...