நேரம் விமர்சனம்
காலத்தோடு இயைந்து, “சூது கவ்வும்” என்றே திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவு தமிழ்த் திரையுலகம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், “தர்மம் வெல்லும்” என்ற காலாவதியான ஆதி நம்பிக்கையை தூசி தட்டி இப்படத்தின் கருவாக வைத்துள்ளார் இயக்குநர்.வேலையை இழந்த வெற்றிக்கு, தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டிய நெருக்கடி. நண்பன் அளிக்கும் பணமும் களவாடபடுகிறது. போதாக்குறைக்கு தங்கையின் கனவன் வேறு மீதமுள்ள வரதட்சனை தொகையைக் கேட்கிறான். மும்முனை தாக்குதலில் சிக்குண்ட வெற்றியின் நிலையென்ன என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அசட்டுத்தனம் வழியும் முகத்துடன், ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்திருப்பார் சிம்ஹா. இந்தப் படத்தின் முரட்டு முதுகெலும்பே வட்டிராஜாவாக வரும் அவர் தான். முகபாவம், உடல்மொழி, மிர...