Shadow

Tag: பாயிண்ட் பிரேக்

பாயிண்ட் பிரேக் விமர்சனம்

பாயிண்ட் பிரேக் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
முடிவெடுத்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் கணத்தையோ, இதற்கு மேல் அடக்கி வைக்க இயலாதென்று குமுறியெழும் அழுகையையோ, இனி பொறுக்க இயலாதென வெடித்தெழும் கோபத்தையோ 'பாயின்ட் ப்ரேக்' என்பார்கள். நாயகனுக்கு அப்படி இரண்டு 'பாயின்ட் ப்ரேக்'கள் படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஏற்படுகிறது. ஒன்று சோகத்திலும்; இன்னொன்று பரவசத்திலும்.  கடலலையில் சறுக்கி விளையாட ஏதுவான சற்றே நீடித்த அலை, கரையிலிருந்து கடலை நோக்கி நீளும் ஒரு நீர் முனையில் வந்து மோதும் இடத்தையும் 'பாயிண்ட் பிரேக்' என்பார்கள். எதிர் நாயகனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பவர் தான் நாயகன் எனத் தோன்றுகிறது. படம் முழுவதும் குறியீடுகளும் தத்துவங்களும் விரவிக் கிடக்கின்றன. நாயகன் பெயர் யூட்டா; எதிர்நாயகன் பெயர் போதி. சமஸ்கிருதத்தில், போதி என்றால் அக ஒளி அல்லது விழிப்பு நிலை எனப் பொருள். நவோஜா எனும் செவ்விந்திய இனமொன்றில், யூட்டா என்றால் மலைகளில் இர...
அச்சம் தாண்டி உச்சம் தொடு

அச்சம் தாண்டி உச்சம் தொடு

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஹாலிவுட்டில் தயாராகும் ஆக்ஷன் படங்களுக்கு, நம் நாட்டில் எப்போதுமே தனியொரு வரவேற்பு உண்டு. இப்படங்கள், மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் போது, வரவேற்பு இரண்டு மடங்காகும்! PVR பிக்சர்ஸ், ‘பாயிண்ட் பிரேக்’ படத்தை தமிழிலும் அதே தலைப்புடனே, 'அச்சம் தாண்டி சிகரம் தொடு' என்கிற பின்குறிப்புடன் வெளியிடுகின்றனர். கேத்ரீன் பிக்லோ இயக்கத்தில், கீனு ரீவ்ஸ் நடித்து 1991இல் வெளிவந்த ‘பாயிண்ட் ப்ரேக்’ படத்தில் சில புதிய மாற்றங்கள் செய்து, அப்படத்தின் மறு அவதாரமாக இப்படத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயமெனில், கதாபாத்திரங்களின் பெயர்கள் இந்து மதப் பெயர்கள் உள்ளன. மேலும், ஒரு வைரக் கொள்ளைக் காட்சியொன்றை மும்பையில் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறும் வீர விளையாட்டுகளில், சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்களும் தோன்றி நடித்துள்ளனர். ஏகத்துக்கு...
சாகசக் குற்றவாளிகளைத் தேடி..

சாகசக் குற்றவாளிகளைத் தேடி..

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஸ்பெக்டர் படத்துடன் பாயிண்ட் பிரேக் படத்தின் ட்ரெயிலரைப் பெரிய அளவில் வெளியிட்டுள்ளனர் PVR பிக்சர்ஸ். நவம்பர் 20 ஆம் தேதி முதல். இந்தியாவெங்கும் 500 திரையரங்குகளில் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஹாலிவுட் படத்தின் ட்ரெயிலர், இது போன்று அதிக திரையில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. யூட்டா எனும் இளம் FBI அதிகாரி, குற்றங்களை அதீத சாகசத்துடன் இணைத்துச் செய்யும் விளையாட்டுக் குழுவைத் தேடிச் செல்வது தான் படத்தின் கதை. இதுவரை வந்த சாகசப் படங்கள் அனைத்தையும் விட அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. கடலலையில் நீர் சறுக்கல், பறவை போல் உடையணிந்து அந்தரத்தில் மிதத்தல், பனி மலைச் சரிவுகளில் சறுக்குதல், பாறைகளில் கருவிகள் ஏதுமின்றி வெறும் கைகளுடன் ஏறுதல், அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் என படம் முழுவதுமே அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள்தான்! கேத்ரீன் பிக்லோ இயக்கத...