Shadow

Tag: பாரதி மணி

பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

கட்டுரை
யாரும் எதிர்பாராத சமயத்தில், திடீரென குழந்தை ‘தாத்தா’ என மழலையில் அழைத்து அவரைப் பரவசத்தில் ஆழ்த்தும். “இன்னொரு முறை அப்படிக் கூப்பிடுடா கொழந்த?” என தாத்தா ஆசையாகக் கேட்டால், அவரைக் கண்டுக்காமல் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடும் குழந்தை. அது குழந்தையின் வெட்கமா அல்லது போதுமென்ற குழந்தையின் ஞானமா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அக்குழந்தையைப் போல்தான், எவரும் எதிர்பார்க்காத சமயத்தில் அனைவரையும் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ எனும் தன் புத்தகத்தால் பரவசத்துக்கு உள்ளாக்கினார் பாட்டையா. அவருக்கு ஏற்பட்ட இன்ஃபைனட் அனுபவங்களின் ஒரு சிறு துளிதான் அப்புத்தகம். ‘ஒரு துளி போதுமா பாட்டையா? கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கிற இந்தக் காலத்தில் ஏன் இந்தக் கஞ்சத்தனம்? தளும்பும் நினைவுக் கடலில் இருந்து ஒரு டம்ளராவது இறக்கிட வேணாமா?’ என பலர் கேட்டுப் பார்த்தனர். ஆனால் பாரதி மணியோ, “I am one book wond...
ஐவரிட்ட ஞானம்

ஐவரிட்ட ஞானம்

கட்டுரை, மற்றவை
மு.கு.: கடவுள் வந்திருந்தார் || சுஜாதா || பாரதி மணி || நடிப்பனுபவம் (!?)விதியாகப்பட்டது வலியது. சிவனேயென அனைத்துக்கும் பார்வையாளனாக இருந்த என்னை கவிஞர் பத்மஜா நாராயணன் பாரதி மணியின் நாடகத்தில் கோர்த்து விட்டு விட்டார். ‘ஒன்னுமில்ல தினேஷ். சின்னதா மாப்பிள்ளை கேரக்டர். அஞ்சாறு வசனம் தான். சிரிச்சுட்டே இருக்கணும். உங்களால் பண்ண முடியாதா? சும்மா நடிக்காதீங்க!!’ என்றார் நான் நடிக்க மறுத்த பொழுது. அவருக்கென்ன அச்சு அசல் மாமியாய் கலக்கி விட்டார்.முதல் நாள் நாடகம் முடிந்ததும் என் நண்பரிடம் என் நடிப்புத் திறமையைப் பற்றிக் கேட்டேன்.“மாப்பிள்ளை மாதிரி பளபளன்னு இருந்தீங்க.”“அலோ நடிப்பைப் பற்றிச் சொல்லுங்க. நிச்சயதார்த்தம் தடைப்பட்டவுடன் நல்லா பதட்டப்பட்டேனா!?”“பதட்டமா? நீங்களா!! உங்களால் அதெல்லாம் முடியுமா? சீன் முடியுற வரை சிரிச்ச முகமா தான் இருந்தீங்க.”பதட்டப்படா விட்டாலு...
என் காதலியின் தந்தை

என் காதலியின் தந்தை

கட்டுரை, புத்தகம்
மு.கு.: பல நேரங்களில் பல மனிதர்கள் || பாரதி மணிபாபா படத்தில் தான் முதன்முதலில் அவரைப் பார்த்தேன். நல்லவராக இன்றி வேறு எவராகவும் இருக்க வாய்ப்பே இல்லாத மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவர் உருவம். என்னைப் போல் தான் எமி ஜாக்சனுக்கும் அவரைப் பற்றி அபிப்ராயம்.பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பற்றி சுகாவின் 'மாங்குலை இல்லாத கல்யாணம்' என்ற கட்டுரையில் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையில் அவர் 'பாட்டையா' என பாரதி மணியைக் குறிப்பிடுகிறார். பாட்டையா என்றால் எனக்கு என்னவென்று அப்பொழுது தெரியாது. அது இசை கட்டுரை என்பதால் கர்நாடக சங்கீதம் பாடுபவரை விளிக்கும் சொல்லென நினைத்துக் கொண்டேன். சுகாவின் அந்தக் கட்டுரையைப் படிக்கச் சொன்னது கவிஞர் பத்மஜா நாராயணன். அவர் சுகாவிற்கு நண்பர். எனக்கும் நண்பர். அதே போல் பாரதி மணிக்கும் நண்பர் எனத் தெரிய வந்தது."தினேஷ...