கோலி சோடா 2 விமர்சனம்
ஆட்டோ ஓட்டுநனான சிவா, பரோட்டா கடையில் வேலை செய்பவனான ஒலி, தாதாவுக்கு கார் ஓட்டிக் கொண்டிருந்தவனான மாறன் என மூன்று இளைஞர்களின் வாழ்க்கையிலும் நடக்கும் எதிர்பாராச் சம்பவங்கள், ஒரு புள்ளியில் அவர்களை நெருக்குகிறது. அப்புள்ளியில் இணையும் அவர்கள், தங்களை நெருக்கும் நபர்களிடம் இருந்து எப்படித் திரும்பி நின்று எதிர்க்கின்றனர் என்பதே படத்தின் கதை.
மூன்று இளைஞர்களையும் ஒரு ஜாதிக் கட்சி மீட்டிங் இணைக்கிறது. அதற்கு முன்பே, மூவருக்கும் பொதுவான ஒரு நலம்விரும்பியாக ஃபார்மசி வைத்திருக்கும் கணேசன் உள்ளார். கணேசனாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். வீறு கொண்டு சீறும் நபராக இல்லாமல் பொறுப்புணர்வுள்ள விவேகியாக உள்ளார். ஆனாலும், பேசிக் கொண்டே இருக்கும் பாத்திரத்தில் இருந்து அவரை விலக்கி வைத்துப் பார்க்க விஜய் மில்டனாலும் முடியவில்லை. நடேசன் எனும் சமுத்திரக்கனி ஏற்றிருக்கும் பாத்திரத்திற்குச் சீரியசான ஃப்ளாஷ்-பே...