தலைநகரம் 2 விமர்சனம்
தலைநகரம் சென்னையை மூன்று ரெளடிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மூவருக்குமே தான் மட்டுமே ஒட்டுமொத்த சென்னையை ஆள வேண்டும் என்பது ஆசை. இதனால் ஒருவரையொருவர் போட்டுத் தள்ளத் துடிக்கின்றனர். அதே நேரம் பழைய ரெளடியான ‘ரைட்டு’, ‘இந்தக் கத்தி, இரத்தம் இதெல்லாம் வேண்டாம்’ என்று ஒதுங்கி, மாலிக் பாய் (தம்பி இராமையா) உடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். ஆனால் காலமும் சூழலும் ரைட்டைத் தன் கையில் மீண்டும் கத்தி தூக்க வைக்க, ஒட்டு மொத்த சென்னையும் அவன் கட்டுப்பாட்டில் வருகிறது. அது எப்படி என்பதைச் சுவாரசியத்துடன் சொல்லி இருக்கிறது தலைநகரம் 2.
படத்தின் மிகப் பெரிய பலமே அந்த மூன்று ரெளடிகளும், அவர்களின் பின்கதையும் தான். நஞ்சப்பா, வம்சி, மாறன் என மூன்று ரெளடிகள். இந்த மூன்று ரெளடிகளுக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திர வடிவமைப்பு. நஞ்சப்பா 5 - 6 இளம் ரெளடிகளை வைத்துக் கொண்டு தொழில்...