Shadow

Tag: பா.ரஞ்சித்

சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என இரண்டு வகை உண்டு..  – ரஞ்சித்

சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என இரண்டு வகை உண்டு.. – ரஞ்சித்

சினிமா, திரைத் துளி
புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா" சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் முதல் நாளான 08.04.2024 அன்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களால் பறை இசையுடன் துவங்கி வெகுசிறப்பாக நடந்து முடிந்தது. முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் ப...
விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, போராடும் போராட்ட கதை

விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, போராடும் போராட்ட கதை

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை, 'கர்ண...
ஜெ. பேபி படம் பார்க்க வருபவர்கள் அவசியம் அம்மாக்களையும் அழைத்து வாருங்கள்

ஜெ. பேபி படம் பார்க்க வருபவர்கள் அவசியம் அம்மாக்களையும் அழைத்து வாருங்கள்

சினிமா, திரைச் செய்தி
பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே  வெளிவந்திருக்கிறது. 'ஜெ பேபி ' படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும் படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர். குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் , சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோர...
மகளிர் தினத்தில் வெளியாகும் பா.ரஞ்சித் வழங்கும் J பேபி

மகளிர் தினத்தில் வெளியாகும் பா.ரஞ்சித் வழங்கும் J பேபி

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் Jபேபி. அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கியுள்ளார்கள். பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் . ஊர்வசி, தினேஷ், மாறன், கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்‌ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். டோனி பிரிட்டோ இசையமைக்க,  ...
Blue Star விமர்சனம்

Blue Star விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மற்றுமொரு ஆடுகளத்தின் கதை.  ஊரில் இரண்டு கிரிக்கெட் அணிகள். அவர்களிடையே ஜாதி ரீதியிலான பிளவு. இரண்டு அணிகளும் முட்டிக் கொண்டும் முறைத்துக் கொண்டும் திரிய, வர்க்கம் அவர்கள் இருவரையுமே இன்னும் கீழாகத்தான் பார்க்கிறது என்கின்ற உண்மை ஒரு கட்டத்தில் முகத்தில் அறைய, இரு அணிகளும் கைகோர்த்து வர்க்கத்தை ஜெயிப்பதே இந்த “ப்ளூ ஸ்டார்” படத்தின் கதை. படத்தின் துவக்கம் மிக மெதுவாகச் செல்கிறது. கதையற்ற காட்சிகளின் கோர்வையாக மட்டுமே கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும் படம், காலணி அணியினருக்கும், ஊர்க்கார அணியினருக்குமான 3 பால் மேட்சில் தான் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குப் பின்னர் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் விதிகளுக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, விளையாட்டுக்கே உண்டான சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்வதால் திரைப்படம் பரபரப்பாகச் செல்கிறது.  க்ளைமாக்ஸ் காட்சியில் பி...
”கலை மக்களை ஒருங்கிணைக்கும்” – பா.இரஞ்சித்

”கலை மக்களை ஒருங்கிணைக்கும்” – பா.இரஞ்சித்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த மார்கழியில் மக்களிசை 23.12.23 KGF -ல் உள்ள நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டையில் முதல் நிகழ்ச்சியாக கோலாகலமாக துவங்கியது . வருடா வருடம் மார்கழி மாதத்தில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு வருடமும் சென்னை, மதுரை கோவை என்று பல ஊர்களில் நடைபெற்று வந்த நிக்கழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. இந்த வருடம் கே ஜி எப் மற்றும் ஓசூரிலும் , சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக ஓசூரில் துவங்கியது. புத்தர் வாழ்த்தோடு துவங்கிய நிகழ்ச்சியில் இயக்குனர் பா. இரஞ்சித் சிறப்புறை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது கே ஜி எப் மக்களின் அன்பு என்னை வியக்க வைக்கிறது. தொடர்ந்து இந்த மக்களோடு பயணிக்க விரும்புகிறேன். க...
”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நீலம் புரொடெக்ஷன்ஸ்  சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித்  மற்றும்  லெமன் லீப் கிரியேஷன்ஸ்  சார்பாக  ஆர்.கணேஷ் மூர்த்தி  மற்றும்  ஜி.சவுந்தர்யா ஆகியோர்  இணைந்து  தயாரித்திருக்கும்  திரைப்படம்  ப்ளூ ஸ்டார்.  அசோக் செல்வன்,  சாந்தனு,  கீர்த்தி பாண்டியன்,  ப்ருத்வி,  பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,  லிசி ஆண்டனி,  திவ்யா துரைசாமி,  அருண் பாலாஜி மற்றும்  பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.   படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன்  பேசும் போது,   இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது.  அமர்...