பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?
நேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தார். காலர் ஆஃப் தி வீக் லாஸ்க்கு. ‘டான்ஸ் ஆடாமல் பேச மாட்டீங்களா? டிவில நியூஸ் வாசிக்கும் போது இப்படித்தான் ஆடிட்டே படிப்பீங்களா?’ எனக் கேட்டார். ‘நியூஸ் படிக்கிற நேரம் போக நான் இப்படித்தான் இருப்பேன்’ எனச் சொன்னார் லாஸ்.
அடுத்து பசங்க டீம் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டித்தவர், ‘இடத்தை மாத்தலேன்னா அந்த அடையாளம் தான் கிடைக்கும்’ எனப் பயமுறுத்தி, ‘மாத்திக்கறேன்’ எனச் சொல்ல வைத்தார்.
“சேரப்பா, ஏன் வேறப்பா ஆனாரு?” என சேரனிடம் முதலில் கேட்டார். நியாயமாக லாஸிடம் தான் கேட்கவேண்டும். “எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை. அவங்க கொஞ்சம் விலகிப் போயிருக்காங்க. திரும்பி வருவாங்க” என விளக்கம் கொடுத்தார்.
லாஸ் முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் சொன்னார். சேரனிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாராம். ‘னால் சேரன் தான் நேர...