Shadow

Tag: பிக் பாஸ் கமல்

பிக் பாஸ் 3: நாள் 97 | ‘பேசிப் பேசிக் குழப்புறடா கவின்!’

பிக் பாஸ் 3: நாள் 97 | ‘பேசிப் பேசிக் குழப்புறடா கவின்!’

பிக் பாஸ்
கமல் வருகை. உள்ளே ஒரு ஷர்ட், அதற்கு மேல் ஒரு ஸ்வெட்டர் டைப் டி-ஷர்ட், அதற்கும் மேல் ஒரு கோட். பட்டாசாக வந்திருந்தார் கமல். இந்த வாரம், அரசியல் பன்ச் கூட இல்லை. அவருக்கே கன்டென்ட் இல்லாத அளவுக்கு மொக்கையாகப் போய்க் கொண்டிருருக்கு. என்ன தான் ஆச்சு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு? பிரிவின் வலியைப் பற்றி தன் வாழ்க்கை உதாரணங்களுடன் பேசினார். பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். ’சல்மார்’ பாடலுடன் தொடங்கியது நாள். மதியம் வரைக்கும் ஒன்றுமே இல்லை போலிருக்கு. மதிய சாப்பாட்டுக்கு பரோட்டாவும் கோழிக்கறியும் வந்தது. ஷெரின் நன்றாகத் தூங்கிக் கொணிருந்தார். எழுப்பி பரோட்டா சாப்பிடுவது எப்படியெனச் சொல்லிக் கொடுத்தார் தர்ஷன். பகல் நேரத்தில் அங்கே வெயில் கொடூரமாக அடிக்கின்றது. ஒருவேளை அதனாலேயே இருக்கலாம். அதற்கப்புறம் லாஸ்லியா பெயர் போட்டு கவர் ஒன்று வந்தது. பிக் பாஸ் போட்டோ வந்துருக்கும் என நினைத்து எல்லோரும் ஆவலாகப் ப...
பிக் பாஸ் 3: நாள் 90 | ‘நேர்மை வென்றது’ – முகினைப் பாராட்டிய கமல்

பிக் பாஸ் 3: நாள் 90 | ‘நேர்மை வென்றது’ – முகினைப் பாராட்டிய கமல்

பிக் பாஸ்
கமல் வருகை. கீழடி ஆய்வு, தமிழ், கலாச்சாரம் எனக் கொஞ்ச நேரம் அடித்து ஆடினார். வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் சைக்கிள் டாஸ்க் தொடந்து கொண்டிருந்தது. 5 மணி நேரத்திற்குப் பின், லாஸின் சைக்கிளின் சக்கரத்தில் துணி ஒன்று மாட்டிக் கொள்ள, சைக்கிள் ஓட்ட முடியாமல் போனது. கீழே இறங்கியவர், அப்படியே மடங்கி அமர்ந்தார். பொது இடத்தில், ஒரு பெண்ணிற்கு உதவி தேவைப்படும் போது, நெருங்கிய உறவாக இருந்தாலும், சற்று விலகி நின்று, இன்னொரு பெண்ணை உதவச் செய்வது தான் சரியான முறை. மனைவியாகவே இருந்தாலும், அதைச் செய்வது தான் சரி. ஆனால் பிக் பாஸ் வீட்டில் எந்த பெண்ணுமே இல்லாத மாதிரி, எல்லா வேலையும் கவினே இழுத்துப் போட்டுச் செய்கிறார். இத்தனை கேமரா இருக்கின்றன, இதைப் பார்க்கிற குடும்பங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. தன் அன்பை இப்படி வெளிக்காட்டியே ஆகவேண்டுமென அவசியமே இல்லை. இங்கே ஷெரின் ...
பிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன்

பிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன்

பிக் பாஸ்
சேரனனின் சீக்ரெட் ரூம் எவிக்ஷனுக்குப் பிறகு தெளிவும் நிம்மதியும் அவர் முகத்தில் இருந்தது. 'எங்கிட்ட நிறைய மாற்றம் வந்துருக்கு' எனச் சொன்னார். அது கண் கூடாகத் தெரிந்தது. உள்ளே வரும்போதும், பிறகு வாராவாரமும், மைக் கிடைத்த பொழுதெல்லாம் நிறைய பேசின சேரனைப் பார்க்க முடியவில்லை. நிறைய அனுபவங்கள் கிடைத்தது. 'என்னோட கோபத்தைத் தூக்கி எறிஞ்சுட்டேன்' என இந்த கேமையே ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தின ஒரு பெருமிதம் அவரிடம் தெரிந்தது. ஒரு குறும்படம் போடத் தயாரான போது, சேரன் சீக்ரெட் ரூம் செல்கிறார் என பிக் பாஸ் குரல் வந்தது. சேரனும் மகிழ்ச்சியாகக் கிளம்பினார். கவினும் காலர் ஆஃப் தி வீக்கும் 'அண்ணா, 75 நாளா பிக் பாஸ் வீட்டுல இருக்கீங்க. ஒரு தடவை கூட பெஸ்ட் பெர்ஃபாமர் அவார்டுக்கோ, கேப்டன் ஆகுறதுக்கோ உங்க பெயரை யாரும் சொல்லவே இல்ல?' என்பது கேள்வி. 'சாரி நண்பா என்னிடம் பதிலில்லை' என்ற கவினிடம், 'மழுப்பாம, புர...
பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட்

பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட்

பிக் பாஸ்
வனிதா தன்னைப் பற்றி சர்ச்சைகள் இருப்பதால் தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறார். இந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள, அல்லது தன்னிடம் மக்கள் இதை தான் நம்மிடம் எதிர்பர்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, சர்ச்சைகளை உருவாக்குகிறாரா என்று தான் தெரியவில்லை. சர்ச்சைகளைத் தொடர்ந்து உருவாக்கி அதன் மூலம் தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பதிய வைக்கவும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் வெளியே வந்து பார்த்துவிட்டு வேற போயிருக்கார். "வனிதாக்காடா" என முஷ்டி மடக்கி சிம்பல் போட்டதை அவர் உண்மை என நினைத்துவிட்டார் போல. அது சர்காஸம் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல், போன தடவை இருந்ததை விட இன்னும் வீரியமாகச் சண்டை போடுகிறார். வனிதா பேசுவதை ஸ்பீச் வகையறாவில் தான் சேர்க்கவேண்டும். அது ஒரு உரையாடலாக எப்பவும் இருக்க முடியாது. அதைப் புரிந்தவர் ஒதுங்கிப் போகின்றனர...
பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

பிக் பாஸ்
நேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தார். காலர் ஆஃப் தி வீக் லாஸ்க்கு. ‘டான்ஸ் ஆடாமல் பேச மாட்டீங்களா? டிவில நியூஸ் வாசிக்கும் போது இப்படித்தான் ஆடிட்டே படிப்பீங்களா?’ எனக் கேட்டார். ‘நியூஸ் படிக்கிற நேரம் போக நான் இப்படித்தான் இருப்பேன்’ எனச் சொன்னார் லாஸ். அடுத்து பசங்க டீம் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டித்தவர், ‘இடத்தை மாத்தலேன்னா அந்த அடையாளம் தான் கிடைக்கும்’ எனப் பயமுறுத்தி, ‘மாத்திக்கறேன்’ எனச் சொல்ல வைத்தார். “சேரப்பா, ஏன் வேறப்பா ஆனாரு?” என சேரனிடம் முதலில் கேட்டார். நியாயமாக லாஸிடம் தான் கேட்கவேண்டும். “எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை. அவங்க கொஞ்சம் விலகிப் போயிருக்காங்க. திரும்பி வருவாங்க” என விளக்கம் கொடுத்தார். லாஸ் முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் சொன்னார். சேரனிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாராம். ‘னால் சேரன் தான் நேர்ம...
பிக் பாஸ் 3: நாள் 49 – ‘கேம் தான விளையாடினார்? ஏன் சாரி?’ – சாக்‌ஷியின் அப்பா

பிக் பாஸ் 3: நாள் 49 – ‘கேம் தான விளையாடினார்? ஏன் சாரி?’ – சாக்‌ஷியின் அப்பா

பிக் பாஸ்
நம் கணக்குப்படி 49வது நாள்தான். ஆனால், ஹவுஸ்மேட்ஸின் அறிமுக படலத்தோடு சேர்ந்து 50வது அத்தியாயம் நிறைவடைந்தது. அதனால் கமல் 50 வது நாள் கொண்டாட்டம் என அறிவித்தார். நேற்று கமல் போட்டிருந்த உடை கண்ணைப் பறிக்கும் அளவுக்கு பளீரென இருந்தது. நேராக வீட்டுக்குள் நுழைந்த உடனே வெற்றியடைய வாய்ப்புள்ளவர்கள் யாரென ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார். பெரும்பான்மையானவர்கள் தர்ஷன், சாண்டி பெயர்களைச் சொன்னது ஆச்சரியமில்லை. ஆனால் மூன்றாவதாக மது இடம் பிடித்தது தான் அதிசயமாக இருந்தது. கலாச்சாரக் காவலர் பட்டம், சில கான்டர்வர்சியான சண்டைகள் இதையெல்லாம் தாண்டித் தன்னை ஒரு வலிமையான போட்டியாளராக முன்னிறுத்தியிருக்கிறார் மது. மதுவுக்கும் மற்ற பொண்ணுங்களுக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் இருக்கு. மது முடிந்து போன விஷயத்தைக் கிளறுவதே இல்லை. அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு பகைமை பாராட்டுவதில்லை. அது சாண்டியோ, ஷெரினோ, மறந்து...