
பிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது
'சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை' பாடலோடு ஆரம்பித்தது நாள்.
முதல் டாஸ்க், தர்ஷன் விலங்குகள் போல் மிமிக்ரி செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும். ‘காலங்கார்த்தால எந்திரிச்சு நாய் மாதிரி கத்திட்டு இருக்கியே?’ என நம் வீட்டில் கேட்பார்கள் இல்லையா? அதை அங்கே லைவ்வாக காட்டிக் கொண்டிருந்தார். எல்லோரும் விதவிதமாகக் கத்திக் கொண்டு இருந்தனர். கஸ்தூரி, சேரன் இரண்டு பேரும் ஓரளவுக்கு நன்றாகச் செய்தனர்.
சேரன் மிமிக்ரி செய்யும் போது கவினின் எதிர்வினையை யாரேனும் கவனித்தீர்களா? சாண்டி மேல சாய்ந்து கொண்டு, தனக்கு இது பிடிக்கவில்லை என்பதை அப்பட்டமாக உடல்மொழியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். நண்பர்களுக்கு இடையிய் இதைச் செய்யும் போது எந்த பிரச்சினையும் இல்லை. அப்போதைக்குத் திட்டிவிடலாம், இல்ல செல்லமாக உதைத்து விட்டுப் போகலாம், இல்ல திரும்ப ஒரு சந்தர்ப்பத்தில் பழிவாங்கிவிடலாம். ஆனால் தனக்கு இது பிடிக்கவில்லை ...