Shadow

Tag: பிக் பாஸ் சரவணன்

பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”

பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”

பிக் பாஸ்
முந்தைய நாளின் தொடர்ச்சியைக் காட்டினர். அங்கே சரவணனும் இருந்தார். ‘என்னடா இது? நேத்து தானே வெளிய போனாரு?” எனா யோசித்துக் கொண்டே தான் பார்க்க வேண்டியிருந்தது. காலையிலேயே மதுவும், அபியும் சண்டைக்குத் தயாராக நின்றனர். கேப்டன் முகின், ‘அங்க என்னம்மா சத்தம்?’ எனக் கேட்கவும், ‘சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்’ எனச் சொன்னாலும், அது சண்டைக்கு முந்தின லெவலில் இருந்தது தான் உண்மை. அபி முகத்தைக் காண்பித்து விட்டுப் போக, முகின் பின்னாடியே சமாதானப்படுத்தப் போனார். இந்த கவினைப் பார்த்து அவரை மாதிரியே எல்லா ஆண்களும் இருப்பாங்க என நினைத்து விட்டார் போல அபி. மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்தால், "இல்ல மச்சா" என உட்கார்ந்து, இரண்டு மணி நேரம் பேசணும் என எதிர்பார்க்கிறார். ஆனா முகின்ல் அப்படி இல்லை. ‘கோச்சுக்கறியா, சரி கோச்சுக்கோ. நான் போய் ஃப்ரூட்டி குடிச்சுட்டு வரேன்” எனப் போய் விடுகிறார். அதே சமயம் தேவையில்ல...
பிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்‌ஷியின் மாஸ்டர் பிளான்

பிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்‌ஷியின் மாஸ்டர் பிளான்

பிக் பாஸ்
ஞாயிறு தொடர்ச்சியாக ஆரம்பித்தது. ரேஷ்மாவின் எவிக்சனுக்கு தான் ஒரு காரணமாகிவிட்டோம் என முகின் இன்னும் அழுது கொண்டே இருக்கிறார். கூட சாக்‌ஷி, ஷெரின், அபி உக்காந்திருக்கும் போது, "நான் முகின் கிட்ட பேசறது உனக்குப் புடிக்கலையா?" எனக் கேட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு அடி போட்டார். இப்பொழுது இதைப் பேச வேண்டுமா? முகின் இன்னும் அழுது கொண்டிருருக்கிறார். "அப்புறம் பேசலாம்" என அபி சொல்ல, "என்கிட்ட மூஞ்சியை காட்டாத" எனச் சாக்‌ஷி சொல்ல, "உனக்கு எப்பவும் உன் பிரச்சினை தான் பெருசு" எனச் சொல்லிக் கொண்டே அபி அந்த இடத்தை விட்டு எழுந்து போனார். உள்ளே போனவர் லாஸ் கிட்ட இதையே சொல்லி அழுகிறார். கூடவே, "நான் அழுதுட்டே வரேன். ஆனா முகின் அங்கேயே உக்காந்துட்டு இருக்கான். அவனுக்கு அவங்க தான் முக்கியம்" எனச் சொல்லி அழ, சமாதானப்படுத்த ஷெரின் வர, அபி அழுது கொண்டே இருக்கிறார். பெட்ரூமில் இருக்கும் போதும் அழுகை தொடர, மு...
பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்

பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்

பிக் பாஸ்
மீசையை எடுத்துவிட்டு மைக்கேல் மதன காமராஜன் காலத்து கமலாக வந்து நின்றார். இரண்டு பட வேலைகள், அரசியல் கட்சி என எவ்வளவு பிரஷர் இருக்கும். ஆனால் ஏற்றுக் கொண்ட வேலையை ரசித்துச் செய்தோம் என்றால் எப்படி ரிசல்ட் இருக்கும் என்பதற்கு கமல் ஒரு உதாரணம். பம்மல் கே.சம்பந்தம் படத்தில் ஒரு காமெடி சீன் இருக்கும். ‘அறிந்தது, அறியாதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் எமனுக்குத் தெரியும்’ என கமல் டயலாக் பேசவேண்டும். சரியாகச் சொல்லாமல் இயக்குநரிடம் திட்டு வாங்குவார். அப்பொழுது காரணம் சொல்லுவார் – ‘கழுத்துல பாம்பு ஊறுது, கைல இருக்க பம்புல இருந்து தண்ணி வரணும், மாடு வேற மிரளாம பார்த்துக்கணும், டயலாக்கும் சொல்லணும்னா எப்படி சார்?’ ஒரே நேரத்துல பல வேலைகள் செய்யும் போது அந்த வேலையின் தரத்தில் நாம் சமரசம் பண்ணிக் கொள்வோம். கேட்டாலும், “ஒரே நேரத்தில் இத்தனை வேலை செய்து பார்த்தால் தெரியும் உனக்கு” என வியாக்கானம் பேசுவோம...
பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன்

பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன்

பிக் பாஸ்
மாரி பாடலுடன் தொடங்கிய நாளில் எப்போதும் இல்லாத வகையில் ஆண்கள் எல்லோரும் சேர்ந்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். நாள் ஆரம்பமே இந்த வார டாஸ்க்கில் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் தேர்ந்தெடுப்பதற்கான வேலை ஆரம்பித்தது. எப்பவும் போல் இந்த வார பெஸ்ட் பெர்ஃபாமர் என வரும்போது சாண்டி, மது இரண்டு பேரும் போட்டியே இல்லாமல் செலக்ட் ஆகினர். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமருக்கு முகின் பேரைச் சொன்ன உடனே யாரும் எதுவும் பேசவில்லை. அடுத்து வொர்ஸ்ட் பெர்ஃபாமர் யாரென வரும் போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. எடுத்த உடனே சாண்டி, ‘சேரன் ரஜினி கேரக்டரில் இன்னும் கொஞ்சம் நல்லா பண்பிருக்கலாம்’ எனச் சொன்ன உடனே ஜெர்க் ஆனார் சேரன். இந்த இடத்தில் சிலதைப் பார்க்கலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த நிகழ்வு நடக்கும் போதெல்லாம், ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் கருத்து சொல்லுவதில்லை. யாராவது ஒருத்தர் ஒரு பேரைச் சொன்னால், அதைக் கூட ஆதரித...
பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா?

பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா?

பிக் பாஸ்
முந்தைய நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பத்தது. சாக்‌ஷி ஒரு பக்கம் அழ, கவின் ஒரு பக்கம் உட்கார்ந்திருக்க, லோஸ்லியா இன்னொரு பக்கம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அபிராமியும் அந்தப் பக்கம் ஹெவியாக பெர்ஃபாமன்ஸ் பண்ணிட்டு இருந்தார். ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். சாக்‌ஷிக்கு ஷெரினும் ரேஷ்மாவும் சொன்னது பெஸ்ட். 'இதை இத்தோட விட்டுத் தொலைச்சிரு. இன்னையோட இதை முடிச்சிரு, நாளைக்குப் புது நாள்' எனச் சொல்ல, அப்படியே கட் பண்ணினால்.. நாள் 39 "இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்" பாட்டைப் போட்டு எழுப்பி விட்டனர். குசும்புக்காகவே இந்தப் பாட்டைப் போட்ருக்கின்றனர். அதுவும் "இரு மணம் கொண்ட" வரி வரும் போது கவினையும், சாக்‌ஷியையும் கட் பண்ணி காட்டியவர்கள், "இடையினில் நீ ஏன்?" வரி வரும் போது லோஸ்லியாவைக் காண்பித்ததெல்லாம் வேற லெவல். எவனோ ஒருத்தர் எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து கற்றுக் கொண்ட மொத்...
பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை

பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை

பிக் பாஸ்
கிராமத்தில் ஒரு கேரக்டர் இருக்கும். யாரையாவது பார்த்தால் போதும், ‘அக்காவ், என் மாமன் செய்யற வேலையைப் பார்த்தியா?’ என ஒரு பாட்டம் மூக்கைச் சிந்தி அழுது வைக்கும். அதற்கப்புறம் சகஜமாகி காப்பி தண்ணி குடித்துவிட்டுச் சிரித்துக் கொண்டே தான் கிளம்பும். அடுத்த தெருவிற்குப் போனால், ‘அயித்த என் மாமியா என்ன பண்றா தெரியுமா?’ என மறுபடியும் அழுவதற்குத் தயாராகிவிடும். நிறைய சினிமாவில் கூட அந்த மாதிரி கேரக்டர் வரும். அந்த கேரக்டரோட டவுசர் போட்ட அப்டேட்டட் மாடர்ன் வெர்ஷன் தான் சாக்ஷி. நேத்து முதல் ஷாட்டே சாக்ஷி அழுது கொண்டிருப்பது தான். கேமராவைப் பார்த்து, ‘நான் வீட்டுக்குப் போறேன்’ என அழுது கொண்டிருந்தார். எப்பேர்ப்பட்ட அறிவாளியும் காதல் உணர்வு வரும் போது எப்படி அடி முட்டாளாக மாறிடுவாங்க என்பதற்கு, சாக்ஷி ஒரு சிறந்த உதாரணம். அண்ணா யுனிவர்சிட்டியில் கோல்டு மெடல் வாங்கிய பெண் அவர். நன்றாகப் படிப்பவர் எல்...