பிக் பாஸ் 3: நாள் 97 | ‘பேசிப் பேசிக் குழப்புறடா கவின்!’
கமல் வருகை. உள்ளே ஒரு ஷர்ட், அதற்கு மேல் ஒரு ஸ்வெட்டர் டைப் டி-ஷர்ட், அதற்கும் மேல் ஒரு கோட். பட்டாசாக வந்திருந்தார் கமல். இந்த வாரம், அரசியல் பன்ச் கூட இல்லை. அவருக்கே கன்டென்ட் இல்லாத அளவுக்கு மொக்கையாகப் போய்க் கொண்டிருருக்கு. என்ன தான் ஆச்சு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு?
பிரிவின் வலியைப் பற்றி தன் வாழ்க்கை உதாரணங்களுடன் பேசினார். பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். ’சல்மார்’ பாடலுடன் தொடங்கியது நாள். மதியம் வரைக்கும் ஒன்றுமே இல்லை போலிருக்கு. மதிய சாப்பாட்டுக்கு பரோட்டாவும் கோழிக்கறியும் வந்தது. ஷெரின் நன்றாகத் தூங்கிக் கொணிருந்தார். எழுப்பி பரோட்டா சாப்பிடுவது எப்படியெனச் சொல்லிக் கொடுத்தார் தர்ஷன். பகல் நேரத்தில் அங்கே வெயில் கொடூரமாக அடிக்கின்றது. ஒருவேளை அதனாலேயே இருக்கலாம். அதற்கப்புறம் லாஸ்லியா பெயர் போட்டு கவர் ஒன்று வந்தது. பிக் பாஸ் போட்டோ வந்துருக்கும் என நினைத்து எல்லோரும் ஆவலாகப்...