Shadow

Tag: பிக் பாஸ் மதுமிதா

பிக் பாஸ் 3: நாள் 55 – எதுவாகினும் ஏற்க முடியாது மதுவின் செயலை!

பிக் பாஸ் 3: நாள் 55 – எதுவாகினும் ஏற்க முடியாது மதுவின் செயலை!

பிக் பாஸ்
நம் நிஜ வாழ்க்கையில் சூழ்நிலைகள் தான் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறது. அந்தத் தருணத்தில் எப்படி ரியாக்ட் செய்கின்றோமோ அதுக்கேற்ற மாதிரி தான் விளைவுகளும் இருக்கும். ஒருத்தன் நல்லவனாகறதுக்கும், கெட்டவனாகறதுக்கும் நடுவில் ஒரு சின்ன கோடு தான் இருக்கு. பிக் பாஸ் வீடும் அப்படித்தான். இங்கே இந்த மாதிரி சூழ்நிலைகள் வரலாம் எனத் தெரிந்து தான் அங்கே போகின்றனர். அப்படி ஒரு மொமென்ட்ல தான் தர்ஷன் ஹீரோவானார். 'என்னடா இது இந்த வனிதா இப்படிப் பேசுறார்? ஒருத்தர் கூட கேக்க மாட்டேங்கறாங்களே?' என ஒரு காமன் மேனுக்கான எதிர்பார்ப்பைத் தர்ஷன் பூர்த்தி செய்தார். நன்றாக யோசித்துப் பார்த்தோம் என்றால் அந்தச் சூழ்நிலை, அந்த வாய்ப்பு அங்கே இருந்த எல்லோருக்கும் இருந்தது. அன்று யார் பேசியிருந்தாலும் ஹீரோவாகிருக்க முடியும். ஆனால் எல்லோரும் தயங்கி தான் நின்றனர். அது தானாக அமைந்த சூழ்நிலை தான். சில சமயம் உருவாக்கப்பட்ட சில சூ...
பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்

பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்

பிக் பாஸ்
‘மானாமதுரை மாமரக் கிளையிலே’ பாடலுடன் தொடங்கியது. ஆரம்பெல்லாம் நன்றாகத்தான் இருக்கு, ஆனால் ஃபினிஷிங் சரியில்லியேப்பா உங்களிடம். ‘நேத்து சொல்லாம தூங்க போய்ட்டீங்களே!’ என சேரனிடம் கேட்டாங்க லாஸ். “என் பொண்ணு எங்கிட்ட பேசாம இருக்கும் போது நான் சொல்லாம போனதுல தப்பில்லையே! நீ பேசறதுக்கு வரவும் மாட்டேங்கற. டைமும் கொடுக்க மாட்டேங்கற. பேசலாம், நிறைய பேசலாம்” எனச் சொல்லிவிட்டுப் போனார் சேரன். இதை அப்படியே பாய்ஸ் டீமிடம் சொன்னார் லாஸ். “உங்க அப்பா, ச்சேச்சே சேரன் சார் எனக்கும் குட்மார்னிங் சார்னு சொன்னாரு” என கவினும் சொன்னார். “சோ, அப்பான்னு கூப்பிட்டதுக்கே லாஸ் இப்ப வருத்தப்படறாங்க போல!” என அந்தப் பக்கம் வனிதாவிடம் ரிப்போர்ட் செய்தார் சேரன். “உங்கிட்ட கொஞ்சம் பேசணும் தம்பி” என தர்ஷனிடம் சொல்லும் சேரன், கொஞ்ச நேரத்தில் பேசவும் செய்தார். கொஞ்ச நேரம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது பார்த்...
பிக் பாஸ் 3 – நாள் 31

பிக் பாஸ் 3 – நாள் 31

பிக் பாஸ்
காலையில், லியாவும் மீராவும் கோலம் போட்டுக் கொண்டிருக்க, கவின் கருமமே கண்ணாக தன் கடமையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே பேசிப் பேசி தான் இம்புட்டு பிரச்சினையும். இன்னுமும் அதையே தான் பண்ணிக் கொண்டிருந்தார். காலையில் முதல் டாஸ்க்காக சாண்டி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாடு மேய்க்கக் கற்றுக் கொடுக்கவேண்டும். இப்படி பாடாவதி எபிசோட்ஸ் பார்த்து தினம் ரீவியூ எழுதுவதற்கு, ‘நீ போய் மாடு மேய்க்கலாம்டா’ என சிம்பாலிக்காகச் சொன்ன மாதிரி இருந்தது. எருமை மாட்டை எப்படி மேய்க்க வேணுமெனச் சொல்லிக் கொடுத்த சாண்டி, மீராவை எருமையாக்கி ஓட்டிக் கொண்டிருந்தார். சாண்டி ஒருநாள் மீராவிடம் மாட்டுவார். அன்னிக்கு இந்த மேட்டர் பேசப்படும். லியாவும் மீராவும் போட்ட கோலத்தை அலங்கோலம் பண்ணிக் கொண்டிருந்தாரு சாண்டி. ‘வருக, நல்வரவு’ என எழுதிருந்ததை, ‘வாந்தி, நல்வாந்தி’ என மாற்றியது மீரா கவனத்துக்கு வர, அவங்க வந்து அதை மாற்றி...
பிக் பாஸ் 3 – நாள் 30

பிக் பாஸ் 3 – நாள் 30

பிக் பாஸ்
காலையில் வெளிய வந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே திகைத்துப் போய்விட்டனர். அட்டகாசமான கிராமிய செட் போடப்பட்டிருந்தது. 'ஆஹா இன்னிக்குப் பெருசா ஒரு டாஸ்க் கொடுக்கப் போறாங்க, நிறைய கன்டென்ட் கிடைக்குமென நம்பி உட்கார்ந்தேன். அதற்கேற்ற மாதிரி டாஸ்க்கும் வந்தது. வீட்டை இரண்டு அணியாகப் பிரித்து, இரண்டு கிராமமாக மாற்றினர். இந்த இரண்டு கிராமத்துக்கும் ஒத்துக்காது, எப்பொழுதும் சண்டை. வீட்டில் இருக்கின்ற கிச்சன் ஏரியாவுக்கு, மதுமிதா தலைவி, பாத்ரூம் ஏரியாவுக்கு சேரன் தான் தலைவர். இந்த அணியைச் சேர்ந்தவங்க அடுத்த ஏரியாவுக்கு போகனும் என்றால் அவங்க சொல்ற டாஸ்க் செய்யவேண்டும். பிக் பாஸ் ஒவ்வொருவரையாக அழைத்து, கேரக்டர் எப்படிச் செய்யணுமெனச் சொல்லிக் கொண்டிருந்தார். சேரன் - ஊர் நாட்டாமை மீரா - மகனை கைக்குள் வைத்துக் கொள்ளும் தாய் தர்ஷன் - அம்மாவுக்கு அடங்கின பையன், ஆனா பொண்டாட்டி மேல பாசமாக இருப்...