Shadow

Tag: பிக் பாஸ் மது

பிக் பாஸ் 3: நாள் 52 – சந்திரமுகியாக மாறிய மது

பிக் பாஸ் 3: நாள் 52 – சந்திரமுகியாக மாறிய மது

பிக் பாஸ்
நேற்று அபிராமியை மையம் கொண்டிருந்த வனிதா புயல் இன்று மதுமிதா பக்கம் தன் பார்வையைத் திருப்பிச் சுழன்றது. டாஸ்க் மீண்டும் ஆரம்பித்தது. மது பஜ்ஜி போட்டுக் கொண்டிருக்க, முகினைக் கூப்பிட்டு சமையல் சம்பந்தமாகப் பாட்டு பாட சொன்னார். கல்யாண சமையல் சாதம் பாட்டைப் பாட, மதுவுக்குப் பக்கத்தில் நின்று கவினும், சாண்டியும் கோரஸ் பாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சேரன், "கொஞ்சம் தள்ளி நின்னு பாடுங்கப்பா! எச்சில் தெறிச்சறப் போகுது" எனச் சொன்ன உடனே கைதட்டி சிரித்தனர் கவினும் சாண்டியும். இந்த நிகழ்வு பார்க்க சாதாரணமாக இருக்கலாம். ஆனால் சாண்டி மேல் சேரன் தொடர்ச்சியாக வைக்கின்ற குற்றச்சாட்டே இது தான். மற்றவர்கள் புண்படுகின்ற மாதிரி கலாய்க்காதீங்க எனச் சொல்லிட்டே தான் இருக்கார். ஆனால் சாண்டி கேட்கிற மாதிரி இல்லை. முந்தைய நாள், "அவர் வந்ததில் இருந்து ஈ ஓட்டிக் கொண்டு தான் இருக்காரு" எனச் சொல்லிச் சிரித்தனர்....
பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்

பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்

பிக் பாஸ்
‘சென்னை சிட்டி கேங்ஸ்ட்ர்’ பாடலோடு தொடங்கியது நாள். கஸ்தூரி வில்லுப்பாட்டு பாடுவாராம். கமல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் நாராசமாக இருந்தது. பேரில் "வின்" வைத்திருக்கிற கவினுக்கு "லாஸ்" தான் பிடிக்குதென லைன் எழுதிக் கொடுத்தது யாருய்யா? சட்டு புட்டுன்னு முடிந்தால் தவலையென இருந்தது. கவினிடம் விசாரணை நடந்தது. ‘நாலு பொண்ணுகளை ஒரே நேரத்துல லவ் பண்றது காமெடியா உனக்கு?’ எனச் சிரித்துக் கொண்டே ஊசி குத்திக் கொண்டிருந்தார் கஸ்தூரி. ‘இதே விஷயத்தை ஒரு பொண்ணு செஞ்சிருந்தா உனக்குக் காமெடியா இருந்திருக்குமா?’ எனக் கஸ்தூரி கேட்ட பொழுது, கவினுக்கு மூஞ்சியே இல்லை. முடிந்து போன விஷயத்தை மறுபடியும் கிளறிக் கொண்டே இருக்கிறார். கூடிய சீக்கிரம் வெடிக்கும். கேப்டனுக்கான டாஸ்க். ஒரு பெரிய கேன்வாஸில், 3 பேரும் கலர் பெயின்ட் அடிக்கவேண்டும். எந்த கலர் பெயின்ட் அதிகமாக இருக்கோ அவங்க தான் வின்னர். ஆரம்பத்தில் சேரன...
பிக் பாஸ் 3: நாள் 36 – நண்பர்கள் என்றாலும் மூக்கை நுழைத்திடாத “இன உணர்வு”

பிக் பாஸ் 3: நாள் 36 – நண்பர்கள் என்றாலும் மூக்கை நுழைத்திடாத “இன உணர்வு”

பிக் பாஸ்
‘நாடோடி, போக வேண்டும் ஓடோடி’ என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் ஆரம்பித்தது நாள். சாண்டி மட்டும் விழுந்து விழுந்து ஆடிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் மாதிரி ஆக்ஷன் கொடுத்து ஆடியதைப் பார்த்து பிக் பாஸ் டீமுக்கு பல்பு எறிந்திருக்கும். பாத்ரூமில் இருக்கும் போதே, இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த வீடே இரண்டாகப் போகுதென சாண்டி சொல்லிக் கொண்டிருந்தார். இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடந்தது. முதல் ஆளாக சாக்ஷி தான் கவின் பேரைச் சொல்லி ஆரம்பித்து வைத்தார். கவின், சாக்ஷி, அபிராமி, ரேஷ்மா, மதுமிதா தான் இந்த வார எலிமினேஷனில் இருக்கிறார்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம். சிலர் சொன்னதைக் கேட்டால், ‘இதெல்லாம் ஒரு காரணமய்யா?’ எனத் தோன்றியது. தன்னை நாமினேட் பண்ணினார் என்பதற்காகத் திருப்பி சாக்ஷியை நாமினேட் செய்தார் சரவணன். முடிந்த உடனே எல்லோரும் ஹக் பண்ணி, ‘எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க!’ எனச் சொல்லிவிட்டுப் போனால...