Shadow

Tag: பிக் பாஸ் முகின்

‘வேலன்’ கூட்டணியின் அடுத்த க்ரைம் த்ரில்லர்

‘வேலன்’ கூட்டணியின் அடுத்த க்ரைம் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், 'வேலன்' பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர் கவினும், நடிகர் முகேனும் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.G. மணிக்கண்ணன் தயாரிப்பில், 'வேலன்' பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவின் மீண்டும் நடிகர் முகேனுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில்  துவங்கியது. இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில்  நடைபெறவுள்ளது.க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தை 'பார்க்கிங்' திரைப்பட கேமராமேன் ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். 'டாடா' புகழ் ஜென் மார்...
பிக் பாஸ் 3: நாள் 90 | ‘நேர்மை வென்றது’ – முகினைப் பாராட்டிய கமல்

பிக் பாஸ் 3: நாள் 90 | ‘நேர்மை வென்றது’ – முகினைப் பாராட்டிய கமல்

பிக் பாஸ்
கமல் வருகை. கீழடி ஆய்வு, தமிழ், கலாச்சாரம் எனக் கொஞ்ச நேரம் அடித்து ஆடினார். வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் சைக்கிள் டாஸ்க் தொடந்து கொண்டிருந்தது. 5 மணி நேரத்திற்குப் பின், லாஸின் சைக்கிளின் சக்கரத்தில் துணி ஒன்று மாட்டிக் கொள்ள, சைக்கிள் ஓட்ட முடியாமல் போனது. கீழே இறங்கியவர், அப்படியே மடங்கி அமர்ந்தார். பொது இடத்தில், ஒரு பெண்ணிற்கு உதவி தேவைப்படும் போது, நெருங்கிய உறவாக இருந்தாலும், சற்று விலகி நின்று, இன்னொரு பெண்ணை உதவச் செய்வது தான் சரியான முறை. மனைவியாகவே இருந்தாலும், அதைச் செய்வது தான் சரி. ஆனால் பிக் பாஸ் வீட்டில் எந்த பெண்ணுமே இல்லாத மாதிரி, எல்லா வேலையும் கவினே இழுத்துப் போட்டுச் செய்கிறார். இத்தனை கேமரா இருக்கின்றன, இதைப் பார்க்கிற குடும்பங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. தன் அன்பை இப்படி வெளிக்காட்டியே ஆகவேண்டுமென அவசியமே இல்லை. இங்கே ஷெரின...
பிக் பாஸ் 3: நாள் 66 | பிக் பாஸ் – சர்வம் நாடகமயம்

பிக் பாஸ் 3: நாள் 66 | பிக் பாஸ் – சர்வம் நாடகமயம்

பிக் பாஸ்
காக்கிச்சட்டை பாடலுடன் தொடங்கியது நாள். கிராமத்து எஃபெக்ட்டாம். என்னவோ ஆடிக் கொண்டிருந்தனர். காலையிலேயே கவின் தன் வேலையை ஆரம்பித்திருந்தான். லாஸிடம், ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, தனக்கு இன்னொரு ரிலேஷன் ஷிப் இருந்தது, அது ப்ரேக் ஆகிவிட்டது எனச் சொன்னதை கேட்டு லாஸ் முகத்தில் ஈயாடவில்லை. அது ரொம்ப சீரியஸ் & காம்ப்ளிகேட்டட் என சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார். அதே சீரியஸ் முகத்தோடு கேட்டுக் கொண்டார் லாஸ். ‘எதுவாக இருந்தாலும் வெளியே போய் பேசிக்கலாம்’ என லாஸ் சொல்ல, கவின் முகத்தில் 1000 வாட்ஸ் பிரகாசம். சரி இப்ப எதற்கு இதைச் சொல்லவேண்டும்? ஒருவேளை இப்பத்தான் ஞாபகம் வந்திருக்குமோ? சாக்ஷியிடம் கல்யாணம் வரைக்கும் பேசிய பொழுதும் இதைச் சொல்லவில்லை. லாஸிடம் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தே கிட்டத்தட்ட 3 வாரம் ஆகிவிட்டது. இப்ப வந்து, அதுவும் ஒரு டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் போது...
பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

பிக் பாஸ்
விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துவிடுவார்களோ என பயந்து கொண்டே தானே பார்க்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. நேற்று வனிதா பேசினது யாருக்கு புரிந்ததோ இல்லையோ, அபிராமிக்கு நிறைய குழப்பங்கள். 'நாம தப்பு பண்ணிட்டோமோ?' என சந்தேகம். அபியைப் பொறுத்தவரைக்கும் இது விளையாட்டாக ஆரம்பித்தது என்று தான் சொல்லவேண்டும். வந்த முதல் நாளே கவினிடம் தன் காதலைச் சொல்கிறார். மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கூட இதை மறைக்கவில்லை. கவின் அபிக்கு வெளியில் ஃபேஸ்புக்கில் அறிமுகம் இருந்திருக்கு. ஒரு கிரஷ். ஆக ஒரு எக்சைட்மென்ட்டில் ஆரம்பித்தது, கவின் விலகி போன உடனே காற்று போன பலூன் மாதிரி ஆகிவிடுகிறது. அந்தப் பக்கம் அபியை ரிஜக்ட் பண்ணின கவின், சாக்‌ஷி பக்கம் சாய்கிறான். ஆக, சாதரணமாக ஒருவரிடம் இருக்கிற ஈகோ அபிக்கும் எட்டிப் பார்க்கிறது. 'நீ என்னை ரிஜக்ட் பண்ணின இல்ல? உன் முன்னாடியே நான் ஒருத்தனை லவ் பண்ணி காட்டற...
பிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்‌ஷியின் மாஸ்டர் பிளான்

பிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்‌ஷியின் மாஸ்டர் பிளான்

பிக் பாஸ்
ஞாயிறு தொடர்ச்சியாக ஆரம்பித்தது. ரேஷ்மாவின் எவிக்சனுக்கு தான் ஒரு காரணமாகிவிட்டோம் என முகின் இன்னும் அழுது கொண்டே இருக்கிறார். கூட சாக்‌ஷி, ஷெரின், அபி உக்காந்திருக்கும் போது, "நான் முகின் கிட்ட பேசறது உனக்குப் புடிக்கலையா?" எனக் கேட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு அடி போட்டார். இப்பொழுது இதைப் பேச வேண்டுமா? முகின் இன்னும் அழுது கொண்டிருருக்கிறார். "அப்புறம் பேசலாம்" என அபி சொல்ல, "என்கிட்ட மூஞ்சியை காட்டாத" எனச் சாக்‌ஷி சொல்ல, "உனக்கு எப்பவும் உன் பிரச்சினை தான் பெருசு" எனச் சொல்லிக் கொண்டே அபி அந்த இடத்தை விட்டு எழுந்து போனார். உள்ளே போனவர் லாஸ் கிட்ட இதையே சொல்லி அழுகிறார். கூடவே, "நான் அழுதுட்டே வரேன். ஆனா முகின் அங்கேயே உக்காந்துட்டு இருக்கான். அவனுக்கு அவங்க தான் முக்கியம்" எனச் சொல்லி அழ, சமாதானப்படுத்த ஷெரின் வர, அபி அழுது கொண்டே இருக்கிறார். பெட்ரூமில் இருக்கும் போதும் அழுகை தொடர, மு...