பிக் பாஸ் 3: நாள் 89 | “எனக்கே விபூதி அடிக்கிறீங்களா?” – கவினின் ஆழ் ஞானம்
லாஸின் அப்பா வந்த போது தன் மகளைப் பார்த்து, ‘நீ இங்க எதுக்கு வந்த?’ எனக் கேட்டார். இப்பொழுது அந்தக் கேள்வியை பாய்ஸ் அணியைப் பார்த்து கேட்க வேண்டும். இத்தனை வாரமும் ஒரு டீமாகச் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு ஒவ்வொருவரையாக வெளியே அனுப்பின பாய்ஸ் டீமுக்கு, இப்ப இத்தனை நாள் போட்ட ஸ்கெட்ச்சே வில்லனாக வந்து நிற்கிறது.
எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து போட்ட திட்டங்களை, ‘இப்ப நமக்கே செய்யறாங்களோ?’ என சந்தேகம் வந்துவிட்டது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், நன்மைகள் ஒரு பக்கம் என்றால், தீமைகளும் ஒரு பக்கம் இருந்தே தீரும். பக்காவாக திட்டம் தீட்டி விளையாடி, நட்பை மெயின்டெயின் செய்து, இத்தனை நாள் பெரிய எதிர்ப்பே இல்லாமல் உள்ளே இருந்தது நன்மை. ஆனால் இப்பொழுது அவர்கள் முன்னாடி நிற்பது அவங்களோட நண்பர்கள். யார் கூடச் சேர்ந்து திட்டம் போட்டார்களோ, அவங்க தான் இருக்காங்க. அந்தப் பிரச்சினை தான் இப்பொழுது ஆரம்பித்துள்ளது....