பிக் பாஸ் 3: நாள் 69 | ‘கலையும் சார்ந்தது தான் கலாச்சாரம்’ – கமல்
நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடி வரவேற்க மேடைக்கு வந்தார் கமல். கலைகளைப் பற்யும், கலாச்சாரத்தை பற்றியும் ஒரு பிரசங்கம் நடந்தது. தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கப் பழகவேண்டும். அதில் கமலை அடித்துக் கொள்ளவே முடியாது. இந்தக் கலைஞர்கள் வந்ததையும் தன் அரசியல் மைலேஜ்க்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.
வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். யுவன் பிறந்த நாளுக்கு, 'மேல ஏறி வாரோம்' பாட்டைப் போட, சேரன் வரைக்கும் எல்லோரும் ஆடினார்கள்.
நேற்று ஷெரின் கூடுதல் உற்சாகத்தோடு இருந்தார். பாத்ரூம் ஏரியாவில் ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்தவர், கவினோடு சேர்ந்து, 'நான் வீட்டுக்குப் போறேன்' என அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தார். 'சாக்ஷி வந்து என்னைக் கூட்டிட்டுப் போவாளா?' எனக்னு கேட்டுக் கொண்டிருந்தார்.
தனக்குக் கொடுக்கப்பட்ட பஜ்ஜியைக் கவினுக்குக் கொடுத்து பாதியை வாங்கிச் சாப்பிட, அங்கே அமர்ந்திர...